மசான கொள்ளை திருவிழா

வேலூர்    

வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் - 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டது திரளானோர் வழிபாடு 
_______________________________________
    வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி சங்குகளை யாக சாலையில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து மஹா பூர்னாஹதிக்கு பின்னர் 1008 சங்குகளும் கொண்டு செல்லப்பட்டு ஜலகண்டீஸ்வரருக்கு பால் தயிர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து பின்னர் 1008 சங்குகளில் உள்ள நீரை கொண்டு சங்காபிஷேகம் செய்து ஜலகண்டீஸ்வரருக்கு தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்
வேலூர்    

 சத்துவாச்சாரியில் கைலாசநாதர் கோவில் சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர் 


    வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீ பருவதவர்த்தினி  சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் பர்வத வர்தினி அம்மன்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாளித்தனர். தொடர்ந்து பக்தர்கள் கோவிலை சுற்றி சாமியை வழிபாடு செய்தனர்

 ராணிப்பேட்டைமாவட்டம்    

 சோளிங்கர் பஜார் தெருவில் அமைந்துள்ள  பழமை வாய்ந்த சோழபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெற்றது.20 கற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

            ராணிப்பேட்டைமாவட்டம் ,சோளிங்கர் பஜார்‌தெருவில்  அமைந்துள்ள  பழமையான சோழபுரீஸ்வரர்  திருக்கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டா சோழபுரீஸ்ஷரர், கனககுஜம்பாள்  சுவாமிக்கு  பல்வேறு நறுமண பொருட்கள் மற்றும் பூஜை  அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு வஸ்திரம், மலர்மாலை, வில்வ மாலை, ருத்திராட்சை மாலை , தங்க ஆபரணங்கள்  அலங்காரம்  செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. 20 க்கும்  மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள்  நெய் தீபம் ஏற்றி தங்கள் நேற்று கடன  செலுத்தி வழிபட்டனர்.  பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள். மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது

 திருப்பத்தூர்மாவட்டம்  


எலம்பட்டி கிராமத்தில் மயான கொள்ளை  அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிவசக்தி வேடம் அணிந்து சிவ தாண்டவம் மாடி பக்தர்களை  பரவசத்துடன் நடனமாடி சாமி தரிசனம் செய்த  திரளானோர்  பொதுமக்கள்  பங்கேற்பு 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் எலவம்பட்டி அடுத்த சிலம்பு  நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிகோயிலில் அம்மன் அருள் பாலித்து வருகின்றார் இந்நிலையில்இன்று மயான கொள்ளை முன்னிட்டு வருடம் ஒருமுறை நடைபெற்று ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கும்பா பூஜை மற்றும் கரகம் எடுத்துதல்  தீசெட்டி எடுத்தல் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றது இந்நிலையில் இன்று ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் கும்ப பூஜை பூங்கரகம்  கரகம் எடுத்தல் மற்றும் தீ செட்டி  ஏந்துதல் மற்றும் உள்ளிட்டவைகள் நடைபெற்றது இந்த அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகின்றார் 

இந்நிலையில் சிவன் மற்றும் சக்தி வேடம் அணிந்து உத்திர தாண்டவம் ஆடி பரவசம் மூட்டி நடனம் ஆடி பக்தர்களை மெய்யி சிலுக்க வத்து காட்சி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வியற்பில் ஆழ்த்தி ஓம் சக்தி அம்மா அகங்காள பரமேஸ்வரி அம்மமா என்று கூக்குரல் இட்டு என்று சாமி தரிசனம் செய்தனர் 

 அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை