செய்திகள்
திருப்பத்தூர்மாவட்டம்
நாட்றம்பள்ளி அருகே பள்ளியை கட்டடித்து மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக போலீசாருக்கு சாக்கு போக்கு காட்டி மாணவர்கள் நாடகம்! பெற்றோர்கள் அடிப்பார்கள் என பொய் கூறியதாக தகவல்!
திருப்பத்தூர்மாவட்டம் ,நாட்றம்பள்ளி அடுத்த பூபதி கவுண்டர் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகன் தர்ஷன் இவரும்எல்லப்பள்ளி அடுத்த ஜலியூர் வட்டம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ரஞ்சித்தும் 8ஆம் வகுப்பு வரை நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் தர்ஷன் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார் அதனை தொடர்ந்து இருவரும் நேற்று ஒன்றாக சந்தித்தபோது இருவரும் பள்ளியை கட்டடித்துவிட்டு அவளியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தில் லிப்ட் கேட்டு அக்ரஹரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல முற்பட்டுள்ளனர் அப்போது கோவில் வந்த நிலையில் டாடா ஏசி வாகன ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் இரண்டு மாணவர்களும் வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.அப்போது ரஞ்சித்துக்கு தலையில் காயமும் தர்ஷனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்இந்தச் சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் இரு மாணவர்களிடம் விசாரிக்கையில் தங்களை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி விட்டதாக நாடகமாடி சாக்கு போக்கு காட்டினர். பின்னர் தீவிர விசாரணையில் பள்ளியை கட்டடித்து விட்டு கோவிலுக்கு சென்றது பெற்றோர்களுக்கு தெரிய வந்தால் அடிப்பார்கள் என்ற காரணத்தால் மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக பொய் கூறினோம் தகவல் தெரிவித்தனர்.இந்த கடத்தல் நாடகம் நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்திய நிலையில் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசியின் நீண்ட நேர கிடுக்குப்பிடி விசாரணைக்கு பிறகு மாணவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி பின்பு எச்சரித்து அனுப்பி வைத்தார்
திருப்பத்தூர்மாவட்டம்
மற்றொரு நண்பனுடன் சேர்ந்து மது அருந்தியதால் நண்பன் வெறி செயல் கத்தியால் குத்தியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெயிண்டர் மருத்துவமனையில் அனுமதி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ராமன்(26) பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ராகுல் (25) இருவரும் நண்பர்கள் எப்போதும் ஒன்றாக சுற்றி வருவது மேலும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது என இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராமன் இன்று ராகுலுக்கு தெரியாமல் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து ஆதியூர் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராகுல் அங்கு சென்று ராமனிடம் என்னை விட்டுவிட்டு இங்கு வந்து எதற்காக குடிக்கிறாய் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது திடீரென ராகுல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.பின்னர் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ராமனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தப்பி ஓடிய ராகுல் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் தனது நண்பன் மற்றொரு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
ராணிப்பேட்டைமாவட்டம்
வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரசவ டாக்டர் இல்லை என கர்ப்பிணி பெண்ணை அலைக்கழித்த மருத்துவர்கள் - மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் இவரது மனைவி சுவாதிக்கு திடீரென இரண்டாவது பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது தகப்பனார் மணி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இரவு 8 மணி அளவில் சேர்த்துள்ளார். அங்கு பணியாற்றக் கூடிய மருத்துவர்கள் அலட்சியமாக பேசியதோடு இங்கு பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இல்லை என்று சொன்னதோடு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போங்கள் என சொல்லி உள்ளனர். பிரசவ வலியோடு துடித்துக் கொண்டிருக்கும் சுவாதியை மருத்துவமனையை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர் 2 மணி நேரம் காத்து கிடந்திருந்த சுவாதி அடுக்கம்பாறைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றார்.ராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக உள்ள வாலாஜா அரசு மருத்துவமனை எந்தவித ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது என காரணமாக பிரசவத்திற்கு வரக்கூடிய அனைத்து தாய்மார்களையும் இப்படித்தான் அலைக்கழிக்கும் வகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக குற்றம் சாட்டினர்.ஒருவேளை பிரசவ வலியோடு துடித்து துடித்துக் கொண்டிருந்த தாய்க்கோ அல்லது குழந்தைகோ உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தால் யார் பொறுப்பேற்று கொள்வார்கள் இப்படிப்பட்ட அரசு மீது எப்படி நம்பிக்கை வரும் யாராக இருந்தாலும் எப்படிப்பட்ட பிரசவமாக இருந்தாலும் அவசர காலத்தில் உடனடியாக பிரசவம் பார்ப்பது தான் அரசு மருத்துவமனையினுடைய கடமை ஆனால் அலட்சியமாக பதில் கூறிவிட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்களே கேள்வி எழுப்பி உள்ளனர்.
அரசு மருத்துவமனையே நாடிவரும் பொது மக்களுக்கு இதுபோன்ற அலட்சியமான பதில் வேதனை அளிக்கிறது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு மருத்துவர் நியமனம் செய்து இங்கு வரக்கூடிய கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்தூர்மாவட்டம்
நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் முன் டயர் வெடித்ததில் சாலையில் விழுந்த ராட்சத கிரானைட் கற்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுநர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் இரண்டு லாரி வைத்து கிரானைட் கற்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார் இந்த நிலையில் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் மகாலிங்கம் 42 ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் ஜெகதேவியில் இருந்து நான்கு ராட்சத கிரேனட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுதுசன்டியூர் பகுதியில் லாரியின் முன் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறி கேட்டு ஓடியது இதனால் சாலையில் உள்ள தடுப்புச் சுவற்றின் மீது மோதி சர்வீஸ் சாலைக்கு அருகே உள்ள பள்ளத்தில் விழுந்தது இதில் ஒரு ராட்சதக்கல் தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற மூன்று ராட்சத கற்கள் அருகில் உள்ள நிலத்திலும் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.
பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மறைவுக்கு இரங்கல்
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி (48) இன்று (25.03.2025) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான மனோஜ் பாரதி தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. முதுமை காலத்தில் கலங்கி நிற்கும் பாரதிராஜா ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத துயரமாகும்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பதினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.
வருத்தத்துடன்,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
Comments
Post a Comment