திராவிடம்
*என்ன "தம்பி" கேட்டாய்*
*திராவிடம்னா என்னவா*
அட அற்பமே
அங்கம் சிதைந்த சிற்பமே
சொல்கிறேன் கேள்
அன்றொரு நாள்
நீ
அநாதையாய்த்
தெருவில்
நாயோடு நாயாய்க் கிடந்தாய்
அப்படி
2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த
உன்னை
100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து
தலைவாரி விட்டதே
*அதன் பெயர் தான்*
*"தம்பி" திராவிடம்*
சக்கிலியனைத்
தொட்டால் தீட்டு
சாணனைப்
பார்த்தாலே
தீட்டு
என்ற
வர்ணாசிரமத்தின்
சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று
" *சீமானாக" உன்னை* *மேடை ஏற்றி இன்று* *பரிணாம வளர்ச்சி* *கொடுத்ததே*
*அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம்*
*கம்பனில்லையா*
*வள்ளுவரில்லையா*
*என்று*
*சங்க காலத்தில்* *சரித்திரம்*
*தேடும் தரித்திரமே*
பனையேறியே செத்துப் போன உன்
படிக்காத பாட்டனை நினை
பானை செய்தே உடைந்து போன உன்
தாத்தாவின் தகுதியை யோசி
விவசாயக்கூலியாய் வரப்புகளில்
நண்டோடு உண்டாடிய
கைநாட்டுகளுக்கு காரணம் யார் ?
செருப்பு தைத்த கைகளுக்குள்
பேனாவைக் கொடுத்தது யார்?
பிணமெரித்த தீப்பந்தத்தில்
விளக்கேற்ற சொன்னது யார் ?
வண்ணான்
அம்பைட்டையன்
என்ற வார்த்தைகளை எல்லாம்
வழக்கொழிக்கச் செய்தது யார் ...?
சூத்திரன் என்றும்
பஞ்சம் என்றும்
மொத்த தமிழனையும்
ஆரியன்
அழைத்தபோது
முதன்முதலில் ஆத்திரம்
கொண்டது யார்?
*அதன் பெயர் தான்* *"தம்பி*"
*திராவிடம்*
மராட்டியர்களிடமும்
நாயக்கர்களிடமும்
தோல்வியடைந்து
நிலத்தையும்
நாட்டையும்
இழந்தபோது
வராத ரோஷம்
நம்பூதிரி
பார்ப்பணர்களால்
தன்தாய்மார்கள்
வரி செலுத்த வழியின்றி
வெற்று மார்போடு
வீதியில் அலைந்தபோது
வராத கோபம்
நூற்றாண்டு திராவிடம் தந்த
சமூகநீதியால்
அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த
பொருளாதார வளத்தால்
உடல் பருத்து
கொழுப்பேறியபோது
திணவெடுத்து
மெல்ல மெல்ல
நக்கத் தொடங்கிய
நாய்களுக்கு
*செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாது*
அதுபோல்
Comments
Post a Comment