உணவு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள தஞ்சான் கொள்ளை , மோட்டலாப்பட்டு, மாட்டு கண்ணு ஆகிய மூன்று கிராமங்களில் தனித்து வசிக்கக்கூடிய முதியவர்கள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக் நேச நதி அறக்கட்டளையோடு இணைந்து இன்று முதல் தொடர்ந்து மதிய உணவு கொடுக்க இருக்கிறோம்.
கூலி வேலை கூட தினமும் கிடைக்காத நிலையில் ஏதாவது ஒரு வேலை செய்தால் தான் வருமானம் என்ற நிலையில் இருக்கும் மிகவும் பின் தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள நபர்களுக்கு தினமும் 100 முதல் 150 பேருக்கு உணவு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment