பயிலரங்கம்
முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் மாணவர்களுக்கு பயிலரங்கம்
வேலூர், மார்ச்.19- வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி வேதியியல் முதுகலை ஆய்வுத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டு கழகம் (ரூசாக்)ஆகியவை இணைந்து முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பெரிசைக்கிளிக் வினைபாடுகள் பற்றிய பயிலரங்கை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் கே.கீதா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ரூசாக் செயலாளர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டு பேசினர்.
இந்தப் பயிலரங்கில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 65 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிலரங்கில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல் பரிசையும், மேல்விஷாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரி இரண்டாவது பரிசையும், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக்கல்லூரி மூன்றாவது பரிசையும் பெற்றது.
முடிவில் ரூசாக் செயற்குழு உறுப்பினர் வரலட்சுமி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர் அசோக் குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Comments
Post a Comment