செய்திகள்

ராணிப்பேட்டைமாவட்டம்   


நெமிலி அருகே ஆலப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று வாலிபர்கள் பலி.மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை 


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது 23)அவரது நண்பர் பிரேம் வயது (23) ஆகியோர் சேந்தமங்கலத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அதேபோல் ஆட்டுப்பக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21)மற்றும் அவருடைய நண்பர் ரஞ்சித் (வயது 21)ஆகியோர் ஆட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து இருந்து சேர்ந்தமங்கலம் நோக்கி வந்துள்ளனர்.அப்பொழுது ஆலப்பாக்கம் அருகே இருசக்கர வாகனங்கள் இரண்டும் அதிவேகமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர் இதில் கீழ் வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆட்டுப்பக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து உள்ளனர் உடன் சென்ற ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோர் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த நெமிலி காவல்துறையினர் இறந்த இருவர் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயங்களுடன் கிடந்த இருவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரேம் உயிரிழந்துள்ளார்.ரஞ்சித் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து நெமிலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.....

திருப்பத்தூர்மாவட்டம்   


 கந்திலி அருகே பெய்து கனமழையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது மரம் முறிந்து விழுந்ததில் பலத்த காயம்!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகன் மகன் தாமோதரன் (34) இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஜூஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பெட்ரோல் வாங்க கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு  சென்று பெட்ரோல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய நிலையில் கரியம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தார்.அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில் திடீரென புங்கமரத்தின் கிளை முறிந்து தாமோதரன் மீது விழுந்தது.
இதனால் வயிற்றில் பலத்த காயின் ஏற்பட்டது இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குடல் பகுதியில் சேதமடைந்துள்ளதாகவும்  கூறப்படுகிறதுஇதன் காரணமாக  வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருப்பத்தூரில் மழை பெய்து வரும் நிலையில் பலத்த காற்றின் காரணமாக மரத்தின் கிளை உடைந்து விழுந்ததில் வாலிபருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்மாவட்டம்     
 

ஆலங்காயம் அருகே தனியார் பேருந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்  பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதபேருந்து ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு வேகமாக பேருந்தை இயக்கி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக பயணிகள் குற்றச்சாட்டு


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து (M.R) சுண்ணாம்புபள்ளம் அருகில் வந்த போது பேருந்து ஓட்டுநர் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர்  செல்போன் பேசிக்கொண்டு வந்ததாகவும் மேலும் முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்தி செல்வதற்காக வேகமாக இயக்கி வந்ததால் பேருந்தின் (ஸ்டேரிங் ராடு கட்டாகி) கட்டுப்பாட்டை  இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த ஆலங்காயம், படகுப்பம் பகுதியை சேர்ந்த அம்மு (41) என்பவர் தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்மேலும் பேருந்து ஓட்டுனர் முருகன், மற்றும் வீரராகவவலசை பகுதியை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் பார்த்திபன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆலங்காயம் அருகே செல்போன் பேசிக்கொண்டு பேருந்தை இயக்கி வந்த ஓட்டுனரின் அலட்சியத்தால் தனியார் பேருந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
[
திருப்பத்தூர்மாவட்டம்    
 


கந்திலி ஒன்றிய திமுக சேர்மேன் மற்றும் பிடிஓ ஆகியோர் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுப்பட்டு வருவதாக கூறி கவுன்சிலர்களுக்கான கூட்டத்தை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் திமுக 12,அதிமுக 8,பாஜக 1,சுயேட்சை 1என மொத்தம் 22கவுன்சிலர்கள் உள்ளனர்.இதனையெடுத்து கந்திலி ஒன்றிய சேர்மேனாக திமுகவை சேர்ந்த திருமதிதிருமுருகன் என்பவர் உள்ளார்.இவர் பதவியேற்று கடந்த மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை நடைப்பெற்ற கவுன்சிலர்களுக்கான கூட்டத்தில் திட்டபணிகளுக்கான தீர்மானம் நோட் கவுன்சிலருக்கு காட்டப்படாமலும், கையெழுத்து பெறாமலும் பல கோடி ரூபாய்க்கான திட்டபணிகள் செய்து உள்ளதாக சேர்மேன் மற்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.மேலும் ஒவ்வொரு கவுன்சிலர்கள் கூட்டத்தின் போதும் அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நோட் கொண்டுவரப்படும் என கூறிவந்த நிலையில் இன்று நடைப்பெற்ற கூட்டத்திலும் தீர்மானம் நோட் கொண்டு வரப்படாததால் அதிர்ச்சி அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் மட்றப்பள்ளி கவுன்சிலர் சின்னதம்பி கூறுகையில் தன்னுடைய மட்றபள்ளி ஊராட்சிக்கு கடந்த மூன்று வருடங்களாக எந்தவொரு அடிப்படை தேவைகளையும் செய்து தரப்படவில்லை எனவும்ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்டால் அதிமுக கவுன்சிலர் என்பதால் தங்களால் உங்கள் ஊராட்சிக்கு எதுவும் செய்ய முடியாது என திமுக சேர்மேன் அராஜகம் செய்து வருவதாக கடும் குற்றம் சாட்டினார்.
பின்னர் பேசிய பெரியகரம் அதிமுக கவுன்சிலர் கூறுகையில்கந்திலி ஒன்றியத்தில் கவுன்சிலர்களிடம் தீர்மானம் நோட்டில் கையெழுத்து வாங்காமலே திமுக சேர்மேன் மற்றும் அதிகாரிகள் பல கோடி ரூபாய் கூட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள்.எனவே மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து சேர்மேன் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 திருப்பத்தூர்மாவட்டம்   


வாணியம்பாடி அருகே நாட்டு வெடி வெடித்து சிதறியதில் வாலிபர்  விரல்கள் துண்டானது தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் கைதுவீட்டில்  பதுக்கி வைத்திருந்த 59 கிலோ  வெடி மருந்துகள் பறிமுதல்.செய்து அம்பலூர் காவல்துறையினர் நடவடிக்கை


திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடியை அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 24). இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று  இரவு வீட்டில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதில் சபரியின் கை விரல்கள் துண்டாகின, கண்களிலும் காயங்கள் ஏற்பட்டன.சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபரியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு.சம்பவம் குறித்து வேலூர் தடயவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் ஐயப்பன் என்பவர் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசுகள் கடை வைத்து விற்பனை செய்து வரும் நிலையில் அவரது உறவினரான சபரி  தனது வீட்டில், நாட்டு வெடிகுண்டு மற்றும், பட்டாசுகளை தயாரித்து, அதனை ஐயப்பனிடம் அளித்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று  இரவு சபரி தனது வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டை தயாரித்து வந்தபோது திடீரென நாட்டு வெடிக்குண்டு வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது, தெரியவந்தது.இந்த நிலையில் இன்று வேலூர் தடயவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்கள் மற்றும் அம்பலூர் போலீசார் ஐயப்பன் வீட்டில் சோதனை செய்தனர்.அப்போது சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை தயார் செய்ய வைத்திருந்த 50 கிலோ வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.மேலும்   பட்டாசு கடை  உரிமையாளர் ஐயப்பன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை அம்பலூர் போலிசார்  கைது செய்தனர்மேலும் ஈச்சங்கால் பகுதியில் ஏற்கனவே கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஐயப்பன் என்பவர் வீட்டின் அருகிலேயே அரசு அனுமதியின்றி  நடத்தி வந்த பட்டாசுகடையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 வீடுகள் சேதமடைந்த போது ஐயப்பன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள், வெடித்து சிதறியதில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடதக்கது

திருப்பத்தூர்மாவட்டம்   

மடவாளம் பகுதி ஏரியில் 50க்கும் மேற்பட்ட மைல்கள் வருகை மயில்கள் தனது தொகையை விரித்து ஆடும் அழகான காட்சி பொதுமக்களிடையே மெய்சிலிர்க்க வைக்கிறது 


திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மடவாளம் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் ஜலகாம்பாறை மலையில் இருந்து அதிகப்படியான மயில்கள் வருகை புரிந்துள்ளது நெற்பயிர்களிலும், கரும்பு தோட்டங்களிலும், மயில்கள் இறைத்தேடி வந்துள்ளது அதுமட்டுமல்லாமல் இப்பகுதியிலேயே மயில்கள் தஞ்சம் அடைந்துள்ளதுமேலும் மயில்கள் அப்பகுதியில் தனது அழகான தோகையை விரித்து ஆடும் காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுக்களிக்கின்றனர் அதிகப்படியான மயில்கள் மடவாளம் ஏரியில் தஞ்சம் அடைந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுக்களித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பத்தூர்மாவட்டம்   

 வாணியம்பாடி அருகே 1250 ஆண்டுகள்  பழமையான சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்



திருப்பத்தூர் மாவட்டம்..வாணியம்பாடு அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள 1250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதீதிஸ்வரர் ஆயலத்தில் இன்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார், முன்னதாக கோவிலுக்கு வந்த இளையராஜாவிற்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது,  அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சரஸ்வதி சன்னதி, முருகர் சன்னதி மற்றும் தட்ணாமூர்த்தி சன்னத்தில் இளையராஜா சாமி தரிசனம் செய்து, சிறப்பு பிரார்த்தனை செய்தார்.. அதனை தொடர்ந்து இளையராஜா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த  கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் , அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்..

திருப்பத்தூர்மாவட்டம்   

 
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில்  அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்புஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை


திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில், சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், மற்றும் ஆம்பூர் கிராமிய  காவல்துறையினர் ஆய்வு மேற்க்கொண்டனர்..அதனை தொடர்ந்து அழுகிய நிலையில், எலும்பு கூடு மட்டுமே இருந்த  உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து,  இறந்த நபர் யார்?  ஆணா  பெண்ணா  எந்த பகுதியை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டாரா   என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர்  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..


  மேலும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ராணிப்பேட்டைமாவட்டம்   

 அரக்கோணத்தில் தண்ணீர் தேடி வந்த ஆண் மயில் சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ பி எம் சர்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டில் நுழைந்ததாக கூறி அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பார்த்தபோது அந்த மயில் திடீரென சாலை குறுக்கே உள்ள தரைப் பாலத்தின் அடியில் சென்றது இதனை அடுத்து சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பின் மயிலை பத்திரமாக மீட்டு இன்று காலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பிடிப்பட்ட மயில் நல்ல நிலையில் உள்ளதாகவும் அதனை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காப்பு காட்டில் உரிய பாதுகாப்போடு விடப்படும் என தெரிவித்தார்.

ராணிப்பேட்டைமாவட்டம்   

 பானாவரம் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக கூறி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


     ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம்  ரங்காபுரம் கூட்டு சாலை அருகே  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை  கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில்  கடந்த 20  நாட்களுக்கு முன்பாக 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள்  நெல் மூட்டைகளை  விற்பனைக்காக செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நெல்லை மூட்டைகளை விற்பனைக்காக நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதுவரை நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென சாலை மாறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பானாவரம் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலை  கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

வேலூர்   
 


வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 27ஆவது வார்டு பகுதியில் வ.உ.சி நகர், மலைமேடு,நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களிடம்  பட்டா தருவதற்காக வருவாய்த்துறையினர் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம்   முதல் 10 லட்சம் வரை லஞ்சம் கேட்பதாக   திமுக மாமன்ற உறுப்பினரே அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை வெளிப்படுத்தி இணையதளங்களிலும் வாட்ஸ் ஆப்பிலும் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு சுமார் ரூ.,50 கோடி வரையில் அதிகாரிகள் முறைகேடாக வசூலிக்க முயற்சி திமுகவினர் கொதிப்பு 
_________________________________________
      வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட 27 ஆவது வார்டான நேரு நகர் வ.உ.சி நகர் மலைமேடு பகுதி சுமார் 2ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே வசித்து வருகின்றனர் இவர்களுக்கு வருவாய்த்துறையினர் தமிழக முதல்வர் அடுத்த மாதம் வேலூர் வரும் போது பட்டா வழங்கவுள்ளதாக கூறி அதனை முறைப்படுத்துவதாகவும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.10லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரையில் பட்டா வழங்குவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை அளவீடு செய்து கேட்பதாக 27 ஆவது வார்டு வேலூர் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர் சதிஷ் என்பவர் பட்டா வழங்கிட லஞ்சம் கேட்பதாக அவரே வாட்ஸ் ஆப்பில் வீடியோவை வெளியிட்டார் இது அதிகாரிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முறைப்படுத்துவது என்று காரணம் காட்டுவதற்கு வீட்டில் ஏசி இருக்க கூடாது பிரிட்ஜ் டிவி இருக்க கூடாது கார் இருக்க கூடாது என காரணங்களை காட்டி அப்படி இருந்தால் பட்டா தரமாட்டோம் என 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை அதிகாரிகள் மிரட்டுகின்றனர் அதுவும் தமிழக முதல்வர் கையாலேயே பட்டா வழங்கபடவுள்ளது என கூறி அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது திமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் கேட்க முயன்ற போது ஒருவர் மாறி ஒருவர் அவரிடம் பேசு இவரிடம் பேசு என அலைகழிக்கின்றனர் 
     திமுக கவுன்சிலர் ஒருவரே அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியிட்டு அதிரடித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
லஞ்சம் வாங்காமல் பட்டா கொடுத்தால் பெற்றுகொள்கிறோம் லஞ்சம் கேட்டால் பட்டாவே தேவையில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

ராணிப்பேட்டைமாவட்டம்  
 
முத்துக்கடையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்பாட்டம் 


    ராணிப்பேட்டைமாவட்டம்,முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவதுபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்அங்கன்வாடி பணியாளர் மற்றும் சத்துணவு உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும்ஓய்வூதியர்களுக்கு மாதம்தோறும் மருத்துவ படியாக 1000 ரூபாய் வழங்க வேண்டும்குடும்ப பாதுகாப்பு நிதியை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்ஓய்வூதியர்களுக்கு என நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்திருந்தார் மேலும் துணைத் தலைவர்கள் ஜெயவேலு கருணாகரன் சுப்பிரமணி ஆகியோர்  திரளான ஓய்வூதியர்களும் பங்கேற்றனர்

வேலூர்   


வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லிப்ட் பாதியிலேயே நின்றதால்  பொதுமக்கள் அவதி.மாநகராட்சி அலுவலகத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்ட பானையில் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் வேதனை.


 வேலூர் மாவட்டம் (இன்ஃபான்ட்ரி) சாலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது அந்த அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், மற்றும் வரி கட்டுதல், இ சேவை மையம், நில அளவு பிரிவு அலுவலகம் என பல்வேறு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்திற்கு சுமார் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என வந்து செல்லும் ஒரு முக்கியமான அலுவலகம்மாக செயல்பட்டு வரக்கூடிய அலுவலகத்தில் உள்ளே இரண்டு ( மின் தூக்கிகள்,  லிப்ட்  ) செயல்பட்டு வருகிறதுஇதில் இரண்டாவது மின் தூக்கி பாதிலேயே நின்றதால் அச்சமடைந்து பொதுமக்கள் அலறி உள்ளனர் அதன் பின் உள்ள இருந்த எமர்ஜென்சி அலாட் அடிக்கப்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் எமர்ஜென்சி சாவியை வைத்து திறந்துமின் தூக்கில் மாட்டிக் கொண்ட நபர்கள் வெளியே வந்து பெருமூச்சு விட்டனர்.பின்பு அங்கு வந்த மின்தூக்கி அழுது சீரமைக்கும் ஊழியர்கள். மின் தூக்கி பழுதான காரணம் ஆய்வு செய்து பார்த்த பிறகு அந்த மின் தூக்கியில் அதிக நபர்கள் ஏறியதால் மின்தூக்கி பாதியிலேயே  நின்று இருக்கலாம் என மின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் பின்பு மின் தூக்கியும் உடனடியாக நிறுத்தி பழுதான மின் தூக்கியை சீரமைத்து வருகின்றனர் மேலும் வேறு ஏதேனும் பழுது இருந்தால் அதையும் சீர் செய்து முறையாக வழிமுறைக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி தாண்டி வெப்பமானது பதிவாகி வருகிறது இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் என பல்வேறு பணிக்காக வந்து செல்லக்கூடிய இடத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவள் நிலையும் ஏற்பட்டுள்ள

வேலூர்   

 சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் பாலியல் குற்ற சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 
____________________________________
      வேலூர்மாவட்டம்,வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவர் கடத்தி சென்று 24.11.2023 அன்று பாலியல் வன் கொடுமை செய்துள்ளார் இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரில் வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர் இந்த வழக்கானது சத்துவாச்சாரியில் உள்ள  வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்து  இன்று வழக்கில்  சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்தது நிருபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.,20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு முத்துக்குமார் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்

வேலூர்   

குடியாத்தம் அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர 15 ஆண்டுகளாக போராடிவரும் கிராம மக்கள்.அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர் 




வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட எர்த்தாங்கல்,ஏரியான்பட்டி, காவாய் மேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே கிராம மக்கள் செய்து வருகின்றனர். ஏரியான்பட்டி முதல் ஏரிபட்டறை வரை மற்றும் காவாய் மேடு முதல் ஆயில் கான் பட்டி வரை சாலைகள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதிக்காக போராடி வருகின்றன சாலைகள் மிகவும் சிதலம் அடைந்து இருப்பதால்நாள்தோறும்  விவசாய நிலத்தில் அறுவடை செய்த விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பால் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்திலும் மிதி வண்டிகளிலும் செல்லும்போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்லும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை