ரத்து
*துரைமுருகன் வழக்கில் வேலூர் கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்*
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3.90 கோடி ரூபாய் வரை சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை வேலூர் நீதிமன்றம் ஏற்கனவே விடுவித்து தீர்ப்பளித்து இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.
Comments
Post a Comment