ஆறுதல்
எர்ணாகுளம்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நா.ராமச்சந்திரனின் குடும்பத்தை #CPIM மத்தியக்குழு உறுப்பினரும், #AIDWA தலைவருமான தோழர் பி.கே.ஸ்ரீமதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
ஸ்ரீ ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தியும், மனைவி ஷீலா டீச்சரும் இக்கொடூரமான தாக்குதலின் விபரங்களையும், உள்ளூர் மக்களிடமிருந்து கிடைத்த உதவி மற்றும் ஆதரவையும் விளக்கினார்.
"குறிப்பாக எங்கள் ஓட்டுநர்கள் முசாபிர் மற்றும் சமீர், என் சகோதரர்களைப் போல எங்களையும் என்னுடைய குழந்தைகளையும் கவனித்துக் கொண்டனர்" என ஆர்த்தி குறிப்பிட்டுச் சொன்னார். #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
Comments
Post a Comment