செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அனைத்து பக்தர்களின் உடமைகளையும் அலிபிரி மலைப்பாதையில் தீவிர சோதனை.
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரங்கல்*
காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன-அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன- டொனால்டு ட்ரம்ப்
*இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம்*
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்
*வாணியம்பாடியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு*
சித்ரா பௌர்ணமி: தி.மலையில் கட்டண தரிசனம் மட்டும் ரத்து*
சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்டண தரிசனம் மட்டும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 10 திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அறிவித்திருந்தது.
ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் கிராமங்களில் பாமக கிளை கூட்டங்கள் நடந்தது சித்திரை முழு நிலவு மாநாட்டிற்காக மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி மாநாட்டின் அம்சங்கள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த , பாலகிருஷ்ணாபுரம்,தலங்கை கிராமத்தில் பாமக தெற்கு ஒன்றியம் சார்பில் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு செல்வதற்க்கான சிறப்பு கிளைக் கூட்டங்கள் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்சங்கர் பங்கேற்று மாமல்லபுரத்தில் மே 11 இல் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் தெற்கு ஒன்றியம் சார்பில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் மாநாடு பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தனர்.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைகளில் மாநாடு குறித்து சுவர் விளம்பரங்கள் துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். மேலும் மாநாட்டின் சிறப்பம்சங்களான ஜாதிவாரி கணக்கெடுப்பு, அனைத்து துறையிலும் வேலை வாய்ப்பு,போதையில்லா தமிழகம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து சிறப்பான மாநாட்டில் நடைபெற உள்ளதாகவும் பொதுமக்களுக்கு தெரிவித்துமாநாட்டில் கலந்து கொள்வது மாநாட்டை வெற்றி பெற செய்வது என கிளை நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் பாண்டியன்,கிளை செயலாளர் அர்ஜுனன், பீமன் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் ஏரியில் மண் கடத்திய 4 பேர் கைது 4டிப்பர் லாரிகள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ராஜாபாளையம் ஏரியில் சிலர் உரிய அனுமதியின்றி மண் அள்ளுவதாக குரிசிலாப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஏரியில் சிலர் டிப்பர் லாரியில் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசாரை பார்த்ததும், அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.இதன் பின்னர் உடனடியாக அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 22), ஹரிதாஸ் (27), மனோஷ் (32), பிரபாகரன் (33) என்பதும், அனுமதியின்றி மண் அள்ளுவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் மண் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Comments
Post a Comment