ஆர்பாட்டம்
பள்ளிகொண்டா அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் வக்ஃபு வாரியம் திடீரென ஐந்து தலைமுறைகளாக குடியிருக்கும் மக்களின் 300 வீடுகள் தங்களுக்கு சொந்தம் என வக்ஃபு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதால் இரண்டு தரப்பிலும் அங்கு பதட்டம் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இருசமுதாயங்களிடையே மோதல் ஏற்படும் சூழல்
__________________________________________
வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு தொகுதிக்குட்பட்ட இறையன் காடு ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை என்ற கிராமம் உள்ளது இதில் இப்பகுதியில் மூன்று தெருக்கள் 500 வீடுகள் உள்ளன இவர்கள் 5 தலைமுறைகளுக்கு மேல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர் இதற்கு சொத்து பத்திரம் மின் இணைப்பு குழாய் இணைப்பு உள்ளிட்ட பல ஆவணங்கள் உள்ளன இதில் வக்ஃபு வாரியம் 14-2-25 அன்று 300 வீடுகளுக்கு இந்த இடம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது எனவும் தாங்கள் வாடகை செலுத்த வேண்டுமெனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த இந்த மக்கள் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ் தலைமையில் 11-4-25 அன்று மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து 300 வீடுகளும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமல்ல தங்களுக்கே சொந்தம் என மனு அளித்தனர் இதுவரையில் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை இந்த நிலையில் மீண்டும் வக்ஃபு வாரியம் 1959 ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது ஐந்து தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசிக்கிறோம் எங்களின் சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் இருசமுதாய மக்களிடையே தற்போது இந்த பிரச்சணை பெரும் பிரச்சணையாக மாறியுள்ளது தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சணைக்கு தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் இது இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பேட்டி:மகேஷ் (இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர்)
பேட்டி:-2- சையத் சதாம் (முத்தவல்லி)
பேட்டி:-3- சுமதி (காட்டுக்கொல்லை பாதிக்கப்பட்டவர்)
Comments
Post a Comment