காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னன்

இதே ஏப்ரல் 28.,1961

*இப்போது ஹாட் டாப்பிக்கில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் கடைசி மன்னர் ஹரி சிங் நினைவு நாளின்று*

செப்டம்பர் 1895ல் ஜம்முவின் அமர் மஹால் மாளிகையில் பிறந்தார் மகாராஜா ஹரி சிங். இவரது தந்தை ராஜா அமர் சிங்-கிற்கு பிறந்த மகன்களில் உயிர் பிழைத்த ஒரே மகன் ஹரி சிங் மட்டும் தான்.

ராஜா அமர் சிங்கின் சகோதரர் பிரதாப் சிங் அவர்கள் தான் இதற்கு முன் ஜம்மு காஷ்மீரின் மன்னராக விளங்கி வந்தார். பிரதாப் சிங்கின் மரணத்திற்கு (செப்டம்பர் 1925) பிறகு, அவரது தத்துப்பிள்ளை ஜகத் தேவ் சிங்கிற்கும், ஹரி சிங்கிற்கும் இடையே யார் அரியணை ஏறுவது என்ற சலசலப்பு நிலவிய போது, பிரிட்டிஷ் தலையிட்டு, மகாராஜா ஹரி சிங்கிற்கு அரியணையை வழங்கியது.1926 பிப்ரவரி 22 - 26 நாட்களில் மகாராஜா ஹரி சிங்கிற்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. மன்னராக பொறுப்பேற்ற பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைமுறையை கொண்டு வந்து பிரஜா சபா அமைய ஏற்பாடுகள் செய்தார் ஹரி சிங்.

இந்த பிரஜா சபாவில் 75 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர் (12 அரசு அதிகாரிகள், 16 ஸ்டேட் கவுன்சிலர்கள், 14 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 33 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்). தேர்ந்தெடுக்கப்பட்ட 33 உறுப்பினர்களில் 21 பேர் இஸ்லாமியர்கள், 10 பேர் இந்து, 2 சீக்கியர்கள் இடம் பெற்றிருந்தனர்.

மகாராஜா ஹரி சிங் 4 திருமணம் செய்தவர். தனது முதல் மூன்று மனைவிகள் மூலம் இவருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. அவர்கள் மூவரும் குழந்தையின்மையின் சில வருடங்களில் மரணித்தனர்.

மனைவி இறந்த உடனே அடுத்த திருமணத்திற்கு தயாராவார் மகாராஜா ஹரி சிங். இவரது நான்காவது மற்றும் கடைசி மனைவி தாரா தேவி மூலம் இவருக்கு மகன் கரண் சிங் பிறந்தார்.

1. முதல் மனைவி ராணி ஸ்ரீ லால் குன்வெர்பா சாஹிபா (1915ம் ஆண்டு பிரசவத்தின் போது மரணித்தார்.)
2. இரண்டாம் மனைவி ராணி சாஹிபா சம்பா (1920ல் மரணித்தார்.)
3. மூன்றாம் மனைவி மகாராணி தன்வந்த் குன்வெரி பைஜி சாஹிபா (மிக இளம் வயதில் இறந்ததாக அறியப்படுகிறார்.)
4. மகாராணி தாரா தேவி சாஹிபா (1950ல் ஹரி சிங் உடனிருந்து பிரிந்த இவர், 1967ல் மரணம் அடைந்தார்)

ஹரி சிங் ஆடம்பரமாக செலவு செய்து வந்தவராக அறியப்படுகிறார். இவருக்கு முன் ஜம்மு காஷ்மீர் மன்னராக விளங்கிய பிரதாப் சிங்கின் இறுதி சடங்கின் போது, ஏராளமான தங்கம் மற்றும் வைரங்களை செலவு செய்தார் என கூறப்படுகிறது.

1921ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் ஏறத்தாழ 300,00 யூரோக்களை தன்னை பிளாக்மெயில் செய்துவந்த விலைமாது பெண்ணுக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
இதன் இன்றைய மதிப்பு 13 மில்லியன் யூரோக்கள் ஆகும். (இன்றைய இந்திய ரூபாயில் கணக்கிட்டால் இது ரூ.116 கோடியை தாண்டும்.) இது 1924ல் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகும் நிலைக்கு சென்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்திய அலுவலகம் இவரது பெயர் வெளியாகாமல் பார்த்து கொண்டது. ஆகவே, வழக்கின் போது ஹரி சிங்கின் பெயர் மிஸ்டர் ஏ என்றே குறிப்பிடப்பட்டது. உளவு பார்த்தல் வழக்காக அறியப்படும் இந்த வழக்கு கோப்புகளை 100 ஆண்டுகளுக்கு மூட பிரிட்டனில் இந்திய அலுவலகம் ஏற்பாடு செய்தது. பொதுவாக, இத்தகைய வழக்கு கோப்புகள் 30 ஆண்டுகள் தான் மூடி வைக்கப்படும் எனவும் சில தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சில பல குழப்பங்கள், ஏகப்பட்ட பலிகளுக்கு பின்னர் காஷ்மீரை ஒருவழியாக இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, மகாராஜா ஹரி சிங் ஜம்மு காஷ்மீரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். ஆகவே, இவர் தனது கடைசி நாட்களை மும்பையில் (அன்றைய பம்பாயில்) வாழ நேர்ந்தது.1961ம் ஆண்டு இதே ஏப்ரல் 26ம் தேதி ஹரி சிங் மரணம் அடைந்தார். ஏறத்தாழ நாடுகடத்தப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பின். மகாராஜா ஹரி சிங்கின் ஆசைக்கு இணங்க, இவரது அஸ்தி ஜம்மு காஷ்மீரில் தூவப்பட்டு, ஜம்முவின் 'தாவி' ஆற்றில் (River Tawi) கரைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை