அதிர்ச்சி
எண்ணெயில் பொரித்து எடுத்த கோழி இறைச்சியுடன் புழுக்களையும் சேர்த்து சாப்பிட கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் செவிலியர்
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில் ஆர்.எம் கோழி இறைச்சி மற்றும் மீன் இறைச்சி பக்கோடா கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடையில் நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் அர்ச்சனா என்ற செவிலியர் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வாங்கி கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது சிக்கன் இறைச்சியுடன் புழுவையும் சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுத்து இருப்பது தெரியவந்தது.இதைக்கண்ட அந்த பெண் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறி இருப்பதாவதுநேற்று இரவு காட்பாடி அருகே உள்ள ஒரு கடையில் நான் சிக்கன் பக்கோடா வாங்கியதாகவும் அதை வீட்டிற்கு கொண்டுவந்து உண்பதற்காக திறந்து பார்த்தபோது.அதில் புழுக்களும் சேர்த்து வறுத்து எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது இதை கண்ட தனது பிள்ளைகள் பதறி உள்ளனர்மேலும் இதை சாப்பிட்டு இருந்தால் குழந்தைகள் நிலைமை என்ன ஆகுவது என வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Comments
Post a Comment