செய்திகள்

 வேலூர்      29-4-25

குடியாத்தம் பகுதியில் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தானுக்கு சுற்றுசுவர் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் நிலையில் உள்ள நிலையில் அதனை விரைந்து முடித்து சுற்றுசுவர் அமைத்து தர கோரி இஸ்லாமியர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் 
____________________________________________
       வேலூர்மாவட்டம்,குடியாத்தம் தாழையாத்தம் ஜோகிமடம் என்ற இடத்தில் இஸ்லாமியர்களின் கபர்ஸ்தான் எனப்படும் மயானம் உள்ளது இங்கு சுற்றுசுவர் அமைத்து தர கோரி இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இவர்களுக்கு ரூ.63 லட்சம் திட்டமதீப்பீடு சுற்றுசுவர் அமைக்க தயார் செய்யப்பட்டுள்ளதாக கடிதம் வந்துள்ளது ஆனால் மூன்றாண்டுகளாகியும் இதுவரையில் சுற்றுசுவர் அமைக்கவில்லை இந்த நிலையில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த இஸ்லாமிய மக்கள் ஆட்சியர் சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து மனுவினை அளித்தனர் அதில் விரைந்து சுற்றுசுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர் ஆட்சியரும் மனுவை பெற்றுகொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் 

 வேலூர்       29-4-25

ஏஐ தொழில்நுட்பத்தை படித்தால் மட்டும் போதாது அதனை முழுமையாக கற்றுகொள்ள வேண்டும் இல்லையென்றால் வேலைவாய்ப்பே இல்லாமல் போய்விடும்   -   ஜெயபிரகாஷ்      காந்தி பேச்சு
___________________________________________________________
       வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழக அரசின் கல்வித்துறையின் சார்பில் கல்லூரி கணவு திட்டத்தின் படி 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படித்தால் எதிர்காலத்தில் வாய்ப்பு என்பதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொறியியல் கலை அறிவியல் ,நர்சிங்,தொழில்நுட்ப படிப்பு போன்ற பல்வேறு துறைகளில் வல்லூநர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் எதை படித்தால் வருங்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என பேசினார்கள்
   இதில் தமிழக அரசின் கல்வி வழிகாட்டி ஜெயபிரகாஷ் காந்தி பேசுகையில் மாணவர்கள் உயர் கல்வியை படிக்க வேண்டும் அது அவர்களுக்கும் பயனுள்ளதாகவும் வேலைவாய்ப்பை பெறும் வகையிலும் அமைய வேண்டும் அதிக அளவில் தற்போது ஏ.ஐ தொழில் நுட்பம் பயன்படுகிறது ஆனால் தற்போது உலகம் முழுவதும் 300 பொறியாளர்கள் மட்டும் வல்லுநர்களாக உள்ளனர் அதில் இந்தியாவில்; 12பேர் மட்டும் உள்ளனர் அவர்களிலும் 8 பேர் அமெரிக்காவில் உள்ளனர் தற்போது 2. 50 லட்சம் பேர் படிக்கின்றனர் ஏஐ தொழில்நுட்பத்தை இவர்கள் வெளியில் வந்தால் பணி கிடைக்குமா என்பது தெரியவில்லை ஏஐ தொழில் நுட்பத்தை படிப்பதை விட அதை கற்றுகொள்ள வேண்டும் ஆனால் ஏஐ படிப்பும் மட்டும் இருந்தால் அது பயனற்று வேலைவாய்ப்பு இல்லாத நிலைக்கும் போய்விடும் என்று பேசினார்  இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றுள்ளனர் இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

ராணிப்பேட்டைமாவட்டம்    29-4-25

 சோளிங்கர் அருகே கரிக்கல் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ குமர முருகன் சுவாமி கோவிலில் சித்திரை மாத கிருத்திகை நடைபெற்ற சிறப்பு பூஜையில் 20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குமர முருகன் கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் குமர முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து சுவாமிக்கு தங்க கவசம் மலர் மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது இதில் 20  கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்

திருப்பத்தூர்மாவட்டம்        29-4-25

 பைக் மீது லாரி மோதி விபத்து துணிக்கடை கூலித்தொழிலாளி உயிரிழப்பு 



திருப்பத்தூர் மாவட்டம் ,வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியின் வழியாகச் திருப்பத்தூர் செல்லும் சர்வீஸ் சாலையில் நேற்று இரவு வாணியம்பாடி பாங்கிராவ் கோட்டை பகுதியை சேர்ந்த துணிக்கடையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி ரயான் அகமத் 34 என்பவர் பைக்கில் தனியாக சென்றுள்ளார் . அப்பொழுது ஆந்திரா பகுதியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஜூஸ் லோடு ஏற்றுக்கொண்டு சங்ககிரி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடாசலம் (50) என்பவர் ஓட்டி வந்த லாரி திடீரென எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ரயான் அகமதை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ரயான் அகமத் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வாணியம்பாடி கிராமிய போலீசார் ரயான் அகமத் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் விபத்து நடைபெற்ற சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை பறிமுதல் செய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 ராணிப்பேட்டைமாவட்டம்      29-4-25

அரக்கோணத்தில் முறையாக ரேஷன் கடை திறக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் திடீரென அரக்கோணம் திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியில் நியாய விலை கடை எண் 5 செயல் பட்டு வருகிறது. இந்த கடை பகுதி நேர கடையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக இந்த கடை சரிவர திறக்கப்படாமல் பொதுமக்கள் கடுமையாக அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை மாத இறுதி நாள் என்பதால் நியாய விலை கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் காலை 11:00 மணி வரை நியாய விலை கடை திறக்கப்படாததால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் வந்த நியாய விலை கடை ஊழியர் கடையை திறந்து பொருட்கள் விநியோகம் செய்ய பி ஓ இ எஸ் மிஷின் செயல்படவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பெண்கள் ஆவேசம் அடைந்து அருகில் உள்ள அரக்கோணம் திருவள்ளூர் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அமைதிப்படுத்தி பொருட்கள் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததை எடுத்து அனைவரும் கலைந்து நியாய விலை கடை அருகில் வந்தனர் அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி உடனடியாக பழுது ஏற்பட்டுள்ள பி ஓ எஸ் மிஷினை மாற்றி பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார். இதன் காரணமாக சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது..

 வேலூர்      29-4-25

வேலூர் அரியூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகர் மர்ம மரணம் போலீசார் விசாரணை
_________________________________
       வேலூர்மாவட்டம்,அரியூர் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் சரத்குமார் (34) இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் அமைப்பாளராகவும் இருந்து வந்தார் இவர் அரியூரில் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார் பின்னர்  இரவு இவர் வீடு திரும்பவில்லை இதனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடி வந்த போது டாஸ்மாக்  கடை அருகில் சிறிது தொலைவில் கவிழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர் இருப்பினும் சரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் மர்ம மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர் 
 இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோ மதுக்கடையில் அவரை 4 பேர் தாக்கியதாகவும் அவர்கள் தான் தலையில் அடித்து அவரை கொலை செய்ததாக புகார் அளித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பதட்ட நிலைகாணப்படுகிறது

வேலூர்      29-4-25
 

போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்திய மூன்று பேர் கைது- குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக மாநில எல்லையோர பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்சைனகுண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது அந்த வழியாக வந்த மூன்று நபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அவர்களிடம் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது அதை அவர்கள் பயன்படுத்துவதாக கொண்டு வந்ததும் விசாரணைக்கு தெரிய வந்ததுஇதனையடுத்து போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்திய குடியாத்தம் அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (24) சஞ்சய் (25)மனோஜ் (22) ஆகிய மூன்று பேரை குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு ஊசிகள் மற்றும் 7  போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து மேலும் இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வேலூர்   29-4-25


காட்பாடி பகுதியில் திருடிய நகைகளை மத்திய பிரதேசத்தில் அடகு வைக்கப்பட்டதை 15 சவரன் நகையை மீட்டு வந்த காட்பாடி காவல்துறையினர் ஒருவன் கைது 


வேலூர்மாவட்டம்,காட்பாடி பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகைகள் திருட்டு போனது இது தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காட்பாடி கிளி தான் பட்டறை எனும் பகுதியில் ஏற்கனவே திருடிய வீட்டில் இரண்டாவது முறையாக திருட வந்த பொழுது சிக்கிய ஒருவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர் இதில் ஆட்டோ நகர் திருப்பதியை சேர்ந்த ராஜேஷ் என்பதும்    இவன் பல இடங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்ததுகடந்த வருடம் செப்டம்பர் நவம்பர் மாதங்களில் காட்பாடி பகுதியில் 3 வீடுகளில் கொள்ளை அடித்த நகைகளை ரயிலில் மத்திய பிரதேசம் மாநிலம் தாடியா என்கிற ஊருக்கு சென்று அங்கு அடகு வைத்து ஜாலியாக செலவு செய்து கொண்டு திரிந்துள்ளான். மேலும் திருடிய நகைகளை ரயில் சென்று மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா என்ற ஊரில் அடகு வைத்து சொகுசாக வாழ்ந்து செலவு செய்ததும் தெரியவந்தது இதன் பின்னர் ராஜேஷை கைது செய்த காட்பாடி காவல்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காட்பாடி பகுதிகளில் மூன்று வீடுகளில் கொள்ளை  அடித்த அந்த நகைகளை மத்திய பிரதேசம் தாட்டியா பகுதியில் அடகு வைத்ததை ராஜேஷ் ஒப்புகொண்டார்  அதன் பின்பு காட்பாடி போலீசார் ஐந்து பேர் உடன் ராஜேஷ் அழைத்துக்கொண்டு 1742 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாட்டியா பகுதிக்கு சென்றுகாட்பாடியில் இருந்து 3484 கிலோமீட்டர்கள் சென்று வந்து     15 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.இதன் பின்னர் ராஜேஷை வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர் 
     காட்பாடி காவல்துறையினர் இது போன்ற வடமாநில திருடர்களை அடையாலம் காண்பதில் மிகவும் சிக்கலாக இருந்த நிலையில் ஒரு நபர் சிக்கி தற்போது அவர் அடகு வைத்த நகைகளை மீட்டு வந்தது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை