தேர் திருவிழா

வேலூர்   


வேலூர் அருகே   பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு தேரை தூக்கி வழிபாடு -    மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட மக்கள் பல்வேறு நேர்த்திகடனை செலுத்தினார்கள் 
____________________________________________
     வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு அருகேயுள்ள வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம் இதில் ஆண்டுதோறும் ஏரித்திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத ஏரித்திருவிழா தேர்திரு விழாவானது இன்று நடைபெற்றது வித்தியாசமான முறையில் வல்லண்டராமம் ,அன்னாச்சிபாளையம்,.வேலங்காடு,பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டிகொண்டு மாட்டு வண்டிகளிலும் டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டிகொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும் கால்நடைகள் நோய்நொடியின்றி இருக்க வேண்டும் இயற்கை வளங்கள் செழிக்க வேண்டும் என வேண்டுதல்களை வைத்தும் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி ஏரியிலேயே ஆடு கோழிகளை பலியிட்டு உணவாக சமைத்து அங்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கி தாங்களும் அவர்களுடன் உணவருந்தி அம்மன் ரதத்தை தோலில் சுமந்து தூக்கி விழாவை கொண்டாடினார்கள் இதில் வேலூர் கிருஷ்ணகிரி,தர்மபுரி,சித்தூர் பெங்களூர் சென்னை திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு லட்சம் மக்கள் கலந்துகொண்டு வேண்டுதல்களையும் நேர்த்திகடனையும் செலுத்தினார்கள் அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மேளதாளங்கள் முழங்க ரதத்தை தூக்கி வந்து ஏரியில் வைத்து வழிபாடு நடத்தினார்கள்   
பின்னர் மூலைகேட் பகுதியில் அன்னதானமும் ஆயிரகணக்கானோருக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு வழங்கினார்


திருப்பத்தூர்மாவட்டம்      


திருப்பத்தூர் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழப்பு 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் பாலாஜி (22) இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். மேலும் தற்போது வரவிருக்கும் நீட் தேர்வு எழுதவும் காத்திருந்தார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள விஷமங்கலம் ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென கால் இடறி ஏரிக்குள் விழுந்ததில் சேற்றில் சிக்கி சிறிது நேரம் போராடி உயிரிழந்து உள்ளார். பின்னர் வீடு திரும்பாத பாலாஜியை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்ற நபர்கள் ஏரியில் பாலாஜி உயிரிழந்து கிடப்பதை அறிந்து  குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.பின்னர் இது குறித்து குடும்பத்தினர் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை உபாதை கழிக்க ஏரிக்குச் சென்ற வாலிபர்  சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.]


ராணிப்பேட்டைமாவட்டம்   

 ராணிப்பேட்டை அருகே ஷூ தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பணியாளர்கள் ஏற்றி வந்த வேன் சாலையில் ஓரமாக இருந்த பள்ளத்தில் கவர்ந்து பயங்கர விபத்து 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பலத்த படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து மாந்தாங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் அலினா என்ற தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பெண் பணியாளர்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்த வேன் ஒன்று சரியாக சிப்காட் எம்ராய்டு நகர் பகுதியில் அருகே உள்ள சாலையின் எதிரே வந்த பேருந்தை பார்த்ததால் வலது புறமாக செல்வதற்காக திருப்பிய  போது எதிர்பாராததுமாக சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் தலை குப்புறக்க கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது..

மேலும் விபத்தில் ஓட்டுநர் உட்பட 20 பேர் பலத்த காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் இருக்கும்   வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை திரையில் அனுமதிப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் தொடர்ந்து தகவலை பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் சாலை ஓரமாக கவிழ்ந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தியதோடு விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ராணிப்பேட்டைமாவட்டம்    

 
சித்திரை சின்ன கெங்கையம்மன் அம்மன் ஆலய கோவில் திருவிழாவின் பட்டாசு வெடித்ததில் மரத்தில் இருந்த தேனீக்கள்  அங்கிருந்த பக்தர்களை துரத்தி துரத்தி கொட்டியதில் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விசாரம் பகுதியில்  சின்ன கெங்கையம்மன் திருக்கோவில் சித்திரை மாதம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழா நூற்றுக்கணக்கான கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் சென்றபோது பட்டாசு வெடிக்கப்பட்டது.இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதில் கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் இருந்த தேனீக்கள் எதிர்பாரதவிதமாக கோயிலில் இருந்த பக்தர்களை தேனீக்கள் கொட்டியது.  இதில் காயமடைந்த பக்தர்கள் 40க்கும் மேற்பட்டோரை 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப் பட்டு   வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளனர்.

திருவிழாவின் பொது பட்டாசு வெடித்ததில் தேனீக்கள் பக்தர்களை கொட்டியதில்  பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டைமாவட்டம்    

 ராணிப்பேட்டை அருகே பள்ளியில் ஒரு மாத கோடை விடுமுறையை முன்னிட்டு ஊரில் அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுமருத்துவமனையில் மகனின் உடலை பார்த்து தாய் மற்றும் உடன் பிறந்த தம்பி கதறி கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் அருகே உள்ள வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த அருள்குமார் மீனா ஆகிய தம்பதியர்களுக்கு ஓம் பிரகாஷ் (14) மற்றும் மோகன்சரண் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள எதிர் வீட்டுக்காரர் பாபு என்பவரின் மகன் அகிலேஷ் (10) ஆகிய மூவரும் இன்று காலை 8 மணி அளவில் பள்ளியில் ஒரு மாத கால கோடை விடுமுறை என்பதால் வெயிலில் தாக்கத்தால் குளிர்ச்சியான சூழல் உருவாகுவதற்காக அதே பகுதியில் கன்னியம்மன்‌ கோவில் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்..அப்போது ஓம் பிரகாஷ் மற்றும் மோகன் சரண் ஆகியோருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் படியில் அமர்ந்தபடி உட்காந்து கொண்டிருந்தபோது 10 வயது அகிலேஷ் மட்டும் நீச்சல் தெரிந்ததால் குளிப்பதற்காக அழைத்துள்ளார் அப்போது எதிர்பாராதமாக தண்ணீரில் இருவரும் மூழ்கிய நிலையில் ஓம் பிரகாஷ் ஆழத்தில் மாட்டி கொண்டதால் அவருடைய தம்பி மோகன் சரண்  கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து தண்ணீரில் இருந்த ஓம்பிரகாஷை வெளியே கொண்டு வந்து முதலுதவி அளித்த பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாபேட்டை அரசு மாவட்டம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் மருத்துவமனையில்  மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தனர்..மேலும் மகனின் உடலைப் பார்த்து தாய் மீனா மற்றும் தம்பி மோகன் சரண் ஆகியோர் மருத்துவமனையில் தரையில் புரண்டு கதறி கதறி அழும் காட்சிகள் காண்போரை கண் கலங்க செய்தது மேலும் இத்தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வருகை தந்த ராணிப்பேட்டை போலீசார் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து (10) வயதான அகிலேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கோடை விடுமுறையில் குளிப்பதற்காக கிணற்றில் சென்ற போது நீச்சல் தெரியாததால் (14) வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..

வேலூர்     

 வேலூர் பாலாற்று பாலத்தின் அடியில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கண்டெடுப்பு காவல்துறையினர் விசாரணை 
 


   வேலூர் மாவட்டம் வேலூரில்   சுமார் 30 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்புவேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்று பாலத்தின் அடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு இதுகுறித்து  வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்   இவரை யாராவது கொலை  செய்து கொண்டு வந்து ஆற்றில் போட்டு சென்றனரா இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்  என விசாரணை செய்து வருவதுடன் கைப்பற்றப்பட்ட சடலத்தை பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

வேலூர்     

 
குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

வேலூர் மாவட்டமகுடியாத்தம் , கெங்கையம்மன் கோவில் திருவிழா  காப்புக் கட்டுதலுடன் மே ம் தேதி தொடங்கிகடந்த 12-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை  கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில்  இன்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது  கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து உற்சவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது.பின்னர் தேர்  கெங்கையம்மன் கோவிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்றதுஇதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.வழிநெடுகிலும் பக்தர்கள்  உப்பு, மிளகு  தேர் மீது இறைத்து  வேண்டுதல்களை நிறைவேற்றினர்.மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் கெங்கையம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் மேலும் நாளை
 கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது

திருப்பத்தூர்மாவட்டம்    

 மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ‌ பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் சுமதி மகன்  ரமண்(27) இவர் கடந்த நான்காம் தேதி எம் எம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறுவர் பூங்காவில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுமதி மற்றும் அவருடைய உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் குட்ட ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மாதுவிடம் 50 ஆயிரம் பணம் மற்றும் சக்தி என்ற நபரிடம் 30 ஆயிரம் பணத்தை ராமன் வாங்கி இருந்ததாகவும் இதன் காரணமாக இருவரும் மது போதையில் அவ்வப்போது வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகவும் பணம் கொடுக்காத காரணத்தால் தனது மகனை அடித்து கொன்று இருக்க கூடும் எனவும அவர்கள் மீது சந்தேகம் உள்ளது எனக் கூறியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் எனது மகன் சார்பில் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் மேலும் அவர்கள் இரண்டு பேரையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

திருப்பத்தூர்மாவட்டம்    
 

 
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 14 34  ஆண்டின் பசலி வருவாய் 
 தீர்வாயம் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்  

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய்  தீர்வாய அலுவலர்  நாராயணன்அவர்கள் தலைமையில் 1434 ஆண்டின் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்றது இதில் பொது மக்களின் மனுக்கள் பெறப்பட்டன இன்று 14 கிராமங்கள் அடங்கிய ஆம்பூர் சான்றோர் குப்பம் பெரியாங்குப்பம் நாச்சியார் குப்பம் மின்னூர் விண்ணமங்கலம் ஆலங்குப்பம் ஆகிய கிராமங்கள் அடங்கிய பொதுமக்களில் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் நிலப்பட்டா வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை ஓய்வூதியம் மனுக்கள் பெறப்பட்டன இதில் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்   பொது மக்களுக்கு கூட்டம் நடைபெறுகிறது என்ற எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை  ஈடுபட்டார் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் புதிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிய தொடர்ந்து கூட்டம் கலந்து சென்றனர்

திருப்பத்தூர்மாவட்டம்    

 திருப்பத்தூர் அருகே நான்கு வருடங்களுக்கு முன்பு உடைந்து விழுந்த தரைப்பாலம் சீர்  செய்து  தர பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூ் அடுத்த அவ்வை நகர் சின்னையா மேஸ்திரி தோட்டம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கதிரிமங்கலம் ஏரி நிரம்பி வெளியேறிய நீரின் காரணமாக இப்பகுதியில் உள்ள தரைப்பாலும் உடைந்து கீழே விழுந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் பொது மக்கள் மட்டும் இன்றி பள்ளி மாணவ மாணவிகள் பயணிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த நான்கு வருட காலமாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். எனவே எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் உடைந்து விழுந்த தரைப்பாலத்தை சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை