செய்திகள்
ராணிப்பேட்டைமாவட்டம்
காதல் செய்து வீட்டை விட்டு வெளியே வந்த காதலருக்கு நேர்ந்த சோகம் - காதலனுக்கு ரத்த காயம் மருத்துவமனையில் அனுமதி - ஆற்காடு நகர போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம், வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் - தனலட்சுமி இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட ஜெய் ஆகாஷ் (20) என்ற மகனும் உள்ளனர்.இவரது மகன் அதே பகுதியைச் சேர்ந்த முத்து - தேவகி தம்பதியரின் மகளான புவனேஸ்வரி (21) என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பெண்ணுக்கு 21 வயதும் ஆணுக்கு 20 வயது என காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால் சமூக வலைதளத்தில் இருவரும் சேர்ந்து தன்னை யாரும் வற்புறுத்தவில்லை, கிட்நாப் செய்யவில்லை என அந்தப் பெண் பேசியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் இருவரையும் தேடி அலைந்து உள்ளனர் இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய காதலர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருப்பதை அறிந்த உறவினர்கள் 10 க்கும் மேற்படோர் சரமாரியாக காதலன் ஜெய் ஆகாசை தாக்கி விட்டு புவனேஸ்வரி கூட்டிச் சென்றனர் ரத்த காயத்துடன் இருந்த ஜெய் ஆகாஷை அங்கிருந்த காவலர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக ஜெய் ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆற்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஐந்து வருடமாக காதல் செய்து வீட்டை விட்டு வெளியேரிய காதலனக்கு நேர்ந்த சோகத்தில் காதலன் ரத்த காயத்துடன் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆற்காடு பேருந்து நிலையம் அருகே காதலனை காதலியின் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருப்பத்தூர்மாவட்டம்
திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்ட உரிமைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 100% ஆதரவாக நான்கு சட்டத் தொகுப்பாக மாற்றியதும் மேலும் விவசாயிகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் விரோதமாக செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் ஏஐடியுசி,சி.ஐடியு,ஐ.எண்டியுசி, உள்ளிட்ட தொழிற்சங்கள் , கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் முக்கிய கோரிக்கைகளாக புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிட வேண்டும் குறைந்தபட்ச ஊதிய மாதம் 26 ஆயிரம் நிர்ணயம் செய்திட வேண்டும் ஒப்பந்த தின கூலி வெளிச்சந்தை முறை பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் விலை உயர்வு கட்டுப்படுத்தி உணவு,மருந்து, விவசாய, பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் 20-5-25
வேலூர்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் - கோடைமழையால் சேதமடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கெடுக்கப்பட்டு வருகிறது - ஆட்சியர் சுப்பு லெட்சுமி தொரப்பாடியில் பேட்டி
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள வேலூர் தந்தை பெரியார் ஈ. வே. ரா அரசுபல்தொழில்நுட்பக் கல்லூரியில் ரூபாய் 233.13 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைகள் 2 கழிவறைகள் கட்டிட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் இதனை அடுத்து நடந்த விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பூமி பூஜையில் பங்கேற்றனர்
பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆட்சியர் ஒவ்வொரு வாரமும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பது குறித்து அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்கின்றோம் ஹீட் ஸ்ட் ரோக் குறித்தும் கலந்தாய்வு செய்துள்ளோம் கோவிட் குறித்து அரசிடமிருந்து என்ன வழிகாட்டுதல் வருகிறதோ அதன் படி நடவடிக்கை எடுப்போம் மருத்துவர்களும் நம்முடைய மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர் அரசு உடனுக்குடன் கோடை மழையால் பயிர்கள் பாதிப்பு வாழைமரங்கள் இடிந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சேதமடைந்த பயிர்கள் குறித்தும் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைதுறையினர் கணக்கிட்டு அறிக்கை அளிக்கின்றனர் சதுப்பேரி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அது குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடத்தி அவர்களுக்கு மாற்று நடவடிக்கை என்ன செய்வது என்பது பின்னர் தெரியவரும் என கூறினார்
வேலூர்
ஆட்டுப்பட்டியில் அடைத்திருந்த ஒன்பது ஆடுகள் திருட்டு--வியாபாரிகள் அதிர்ச்சி - போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆடு அறுக்கும் கூடம் சுண்ணாம்புபேட்டையில் செயல்பட்டு வருகிறது அதன் அருகிலேயே ஆடுகளை அடைத்து வைக்கும் ஆட்டுப்பட்டி உள்ளது ஆட்டு இறைச்சி வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகளை அந்தப் பட்டியில் அடைத்து வைப்பார்கள் இதனிடையே இன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டுப்பட்டி கேட்டை கட்டப்பாறையால் உடைத்து ஆட்டுப்பட்டியில் இருந்த 9 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்இதனையடுத்து காலையில் வந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் மேலும் இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்ஆட்டுப்பட்டியில் இருந்து 9 ஆடுகள் திருடு போன சம்பவம் சுண்ணாம்புப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றி சென்ற லாரி சேஸ் உடைந்ததால் போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் 5 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 43 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியானது கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்ப பணிக்காக சாலையின் இரு புறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி வேகத்தடையில் ஏறி இறங்கிய போது லாரியின் செஸ் உடைந்தது இதனால் லாரி செல்ல முடியாமல் நின்றதாலும் குறுகலான சாலை என்பதாலும் ஒரு வழிப்பாதை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழி பாதையாக மாற்றியதை தொடர்ந்து இரண்டு புறங்களில் வரும் வாகனங்கள் அதாவது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் ஒரு மணி நேரமும் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் ஒரு மணி நேரம் என மாற்றி மாற்றி அனுப்பி வைக்கப்படுவதால் பல கிலோமீட்டர்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று வருகிறது.
Comments
Post a Comment