செய்திகள்
வேலூர்
தி.மு.க ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற கட்சி. வாழையடி வாழையாக வருகின்ற கட்சி. அண்ணாவிற்கு பிறகு கலைஞர், கலைஞருக்கு பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என வாழையடி வாழையாக உள்ள கட்சி துரைமுருகன் பேச்சு.காட்பாடியில் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க சார்பில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கழிஞ்சூர் அருப்புமேட்டில் நடந்ததுபொது கூட்டத்திற்கு வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான எம். சுனில்குமார் தலைமை தாங்கி பேசினார்.வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம். எல்.ஏ., முன்னிலை வகித்து பேசினார்.பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;வாழையடி வாழையாகதி.மு.க ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற கட்சி. வாழையடி வாழையாக வருகின்ற கட்சி. அண்ணாவிற்கு பிறகு கலைஞர், கலைஞருக்கு பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என வாழையடி வாழையாக உள்ள கட்சி.காட்பாடி தொகுதியில் தாசில்தார் அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன். அதே போல 1971ஆம் ஆண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.அப்பொழுது முதலமைச்சராக இருந்த கலைஞர் வந்து இதனை தொடங்கி வைத்தார்.காட்பாடி தொகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.பழுதடைந்த பொன்னை மேம்பாலம் ரூ.48 கோடியில் புதுப்பித்து கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீர் எப்போதும் பாலாற்றில் இருக்கும். நான் பள்ளி படிக்கும்போது காட்பாடியில் ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளி இருந்தது. இப்போது 18க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் உள்ளன. சேர்க்காடு கூட்ரோட்டில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.காட்பாடியில் மற்றொரு ரெயில்வே மேம்பாலம் கட்ட அடுத்த வாரம் அடிக்கல் நாட்டப்படும். மாணவர்களை படிக்க வைத்து விட்டேன்.3 தொழிற்பேட்டைகள் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக காட்பாடி தொகுதியில் மகிமண்டலம், டெல் கம்பெனி எதிரே, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர் உள்பட ஐந்து கிராமங்களை உள்ளடக்கி ஒரு தொழிற்பேட்டை என மூன்று தொழிற்பேட்டைகள் அமைய உள்ளது.ஒரே தொகுதியில் மூன்று தொழிற்பேட்டைகள் அமைய உள்ளது காட்பாடி தொகுதியில் மட்டும் தான். இதன் மூலம் தொகுதியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் திட்டத்தில் ரூ.40 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. கவசம்பட்டில் இதற்காக தடுப்பணை கட்டப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
ராணிப்பேட்டைமாவட்டம்
வாலாஜா அருகே வரம் தரும் சுயம்பு நந்தீஸ்வரர் மலை கோவிலில் திருவண்ணாமலை போலவே 20 கிலோ மீட்டர் தூரம் வரை கைகளில் தீபங்களை ஏந்தியபடி கிரிவலைப்பாதையை சுற்றி வந்து சிவபெருமானை வழிபட்ட கிராம பக்தர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொங்கன மற்றும் தங்க சித்தர்களால் வழிபட்ட சுயம்பாக சிவபெருமான் நந்தியின் மேல் அமர்ந்தபடி சிவாலயமாக விளங்கி வரும் அருள்மிகு ஶ்ரீ வரம் தரும் சுயம்பு நந்தீஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுயம்பு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது..
அதனைத்தொடர்ந்து கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் முதியவர்கள் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு திருவண்ணாமலையில் சிவனை வணங்குவதற்காக கிரிவலப்பாதையில் சுற்றிவரும் நிகழ்வை போலவே வாலாஜாபேட்டை எடக்குப்பம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அனந்தலை, செங்காடு மோட்டூர், முசிறி, புலித்தாங்கல், தென்கடப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் கைகளில் தீபத்தை ஏந்தியவாறு நமச்சிவாய நமச்சிவாய என மந்திரங்களை உச்சரித்தபடியே ஊர்வலமாக சென்று சிவபெருமானை மனமுருகி வழிபட்டு சென்றனர்
திருப்பத்தூர்மாவட்டம்
நாட்றம்பள்ளியில் திரைப்பட நடன நிகழ்ச்சி நடைபெற்று இருந்தபோது இரு கோஷ்டிகளிலேயே தகராறு காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.அப்போது இரவு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி திரைப்பட நாட்டிய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.அதில் சுற்றுள்ள கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்து வந்தனர்.அப்போது ஒரு சில இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்து வந்தனர்.இந்தநிலையில் இரு கோஷ்டி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.அப்போது காவல் பணியில் இருந்த சில போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்மாவட்டம்
இஸ்லாமியர்களுக்கு எத்தனை அடக்குமுறை வந்தாலும் பாதுகாவலனாக, முதல் சிப்பாயாக நிற்பவர் மு.க.ஸ்டாலின் வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தை அருகில் இன்று திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்கப்பொதுக்கூட்டம், வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார் தலைமையில் நடைப்பெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று பேசிய வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்.மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக எத்தனையோ அடக்கு முறையை கொண்டு வந்தாலும் யார் வந்தாலும் எவன் வந்தாலும் சரி இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலனாக முதல் சிப்பாயாக இருப்பவர் மு.க. ஸ்டாலின் தான் குடியுரிமை வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சட்டங்கள் வந்தபோது முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு தோளுக்கு தோளாய் நிற்பவர் மு.க.ஸ்டாலின் எனப்பேசினார், இக்கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும், திமுக தலைமை கழக பேச்சாளர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்மாவட்டம்
விஎஸ் வீரபத்திர முதலியார் பூங்காவில் மரக்கன்றுகள் வைத்த சேர்மன் மற்றும் கமிஷனர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் விஎஸ் வீரபத்திர முதலியார் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பல மரங்கள் இருந்த போதிலும் இங்கு செடிகள் வைப்பதற்கு பல இடங்கள் இருந்ததால் அதனை சீர்படுத்தி இங்கே செடி வைக்கப்பட்டன இதனால் செடிகள் வைத்து தினந்தோறும் இதனை பராமரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா மற்றும் திருப்பத்தூர் நகராட்சி கமிஷனர் சாந்தி ஆகியோர் 50 மரக்கன்றுகளை வைத்தனர். மேலும் இந்த பூங்காவை பூரண அமைக்க 17 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் போன்றவை இதில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்கள் அன்றாட பொதுமக்கள் இங்கு வந்து விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கான பணியை ஒரு சில நாட்களில் துவங்கப்படுவதாகவும் நகராட்சி கமிஷனர் சாந்தி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறுவரிடம் செடிகள் வைப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்இந்த நிகழ்வில் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்மாவட்டம்
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆந்திரா மாநில வாலிபர் போக்ஸோ வழக்கில் கைது! ரயில்வே போலீசார் நடவடிக்கை.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் தனது ஒன்பது வயது மகளுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காட்பாடி வழியாக வந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர் அப்போது ஒன்பது வயது சிறுமியிடம் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு மகன் குமார் (வயது 30) என்பவர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளார் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி அடுத்த ரிசர்வேஷன் பெட்டிக்கு சென்றுள்ளார்.அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து டிடிஆர் இடம் ஒப்படைத்துள்ளனர் பிறகு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வந்தவுடன் அவரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர். ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
வேலூர்
பேரணாம்பட்டு அருகே நர்சிங் கல்லூரி மாணவி ஏழு பக்க கடிதத்தை எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை காதலித்து ஏமாற்றப்பட்டாரா அல்லது ஆசைக்காக திருமணம் செய்து ஏமாற்றப்பட்டாரா யார் அந்த இளைஞர்- மேல்பட்டி போலீசார் மற்றும் கோட்டாட்சியர் விசாரணை
வேலூர் மாவட்டம்பேரணாம்பட்டு அருகே பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் லட்சுமி தம்பதியினருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இரண்டாவது மகள் கோமதி என்கிற கோட்டீஸ்வரி (21) இவர் வீட்டில் இருந்தவாறு வாலாஜா பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். மேலும் கடந்த ஆண்டு சென்னையில் ஹோம் கேர் பராமரிப்பு வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறதுஇந்நிலையில் இவர் தனது வீட்டில் மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இவரது தாயார் லட்சுமி மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் மேல்பட்டி போலீசார் கோட்டீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்மேலும் மேல்பட்டிபோலீசார் விசாரணையில் கோட்டீஸ்வரி இறப்பதற்கு முன்பு எழுதியுள்ள 7 பக்க கடிதத்தில் தான் சென்னையில் வேலை செய்து வந்த போது தன்னை (கோட்டீஸ்வரி) பிரசாந்த் என்பவர் தன்னை வற்புறுத்தி தனது காலில் விழுந்து, காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும், தற்போதுஉன் குடும்பத்திற்காக என்னை தூக்கி எறிந்து விட்டதால் எனக்கு வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை, என்னை ஏமாற்றி விட்டாய்,என்னை நம்ப வைத்து மோசம் செய்த, நீ ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கை வாழ்வாய் நீ கஷ்டப்படுவ உனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் எனவும், மேலும் அப்பா அம்மா அக்கா தங்கைகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் சண்டை போடாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் உருக்கமாக ஏழு பக்க கடிதத்தை எழுதி வைத்து கோடீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
மேலும் சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் மற்றும் குடியாத்தம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற வைகாசி கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தோசிதப் பெருமாள் காட்சி தந்து மாட வீதிகள் உலா வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஏராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றானசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி கருட சேவை உற்சவம் விமர்சியாக நடைப்பெற்றது.இதனை முன்னிட்டு பக்தோசிதப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் வீடு தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக நுழைவாயிலில் 8-ஆவது ஊதிய குழுவின் பரிந்துரைகளையும் வழக்கம் போல் ஓய்வூதியர்கள் எல்லோருக்கும் நடைமுறைப்படுத்திட வேண்டும்,தேர்தல் கால வாக்குறுதியின் படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை எல்லோருக்கும் நடைமுறைப்படுத்திட வேண்டும்,ஓய்வூதியத்திற்கு எதிர்காலத்திலும் தமிழக அரசின் நிபந்தனையற்ற உத்தரவாதம் வழங்கும் வகையில் முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்'
Comments
Post a Comment