செய்திகள்

 ராணிப்பேட்டைமாவட்டம்      15-5-25


அரக்கோணத்தில் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆவேசம்.திருப்பதி - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரத்தில் நேற்று இரவு 12 மணிக்கு மேல் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. கோடைகால வெப்பம் நிலவி வருவதாலும் சுமார் ஐந்து மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையான அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் வின்டர்பேட்டை பகுதியில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மின்சாரம் துண்டிக்கப்பட்டவை கண்டித்து திடீரென திருப்பதி -காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தைக்கு பின் மின்சாரம் சீர் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.இதனை அடுத்து மறிலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதன் காரணமாக திருப்பதி காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன..



திருப்பத்தூர்மாவட்டம்     15-5-25


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டிக் டேங்கில் விழுந்த மாடு பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பணியாளர்கள் செப்டிக் டேங்கில் விழுந்துள்ள மாட்டை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி மாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.மேலும் இதுபோல் மாட்டை அவிழ்த்து விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ கோரிக்கை எழுந்துள்ளது அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்க் உடைந்த சிமெண்ட் தகரத்தாள் மூடப்பட்டுள்ளது அதனை முறையாக கான்கிரீட் போட்டு மூட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது

ராணிப்பேட்டைமாவட்டம்      15-5-25

 ராணிப்பேட்டை அருகே அமைச்சர் ஆர் காந்தி வீட்டின் எதிரே வைகோல்களை ஏற்றி கொண்டு வந்த டிராக்டர் சாலையின் நடுவே திருப்பியபோது எதிர்பாராதமாக தலைகீழாக கவிழ்ந்து   விபத்துமேலும் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் அனைவரும் உயிர் தப்பியதோடு சாலையில் நடுவே டிராக்டர் கவிழ்ந்ததால்  வைக்கோல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

               ராணிப்பேட்டைமாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த மாகாணிப்பட்டு பகுதியை சேர்ந்த பழனி வயது (50)  என்பவருக்கு சொந்தமான அறுவடை செய்த நிலத்தில் இருந்த சுமார் 108-க்கும் மேற்பட்ட பண்டல் அடங்கிய வைக்கோல்களை காவேரிப்பாக்கத்தில் இருந்து வேலூர் மாவட்டம் லத்தேரி நோக்கி டிராக்டர் மூலமாக சென்றதாக கூறப்படுகிறது அப்போது ‌ முத்துக்கடை அருகே அமைச்சர் ஆர் காந்தி வீட்டின் எதிரே உள்ள சாலையில் ‌டிராக்டரை திருப்பியபோது எதிர்பாராதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது இதனையடுத்து டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பழனி உட்பட தொழிலாளர்கள் ‌ அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு சாலையில் கிடந்த வைகோல்கள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை போலீசார் ‌ஈடுபட்டு வருகின்றனர் மேலும் விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் ‌வழக்கு பதிவு செய்து ‌விபத்து காரணம் குறித்து ‌விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

ராணிப்பேட்டைமாவட்டம்     15-5-25

 அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் உறவுகளுக்குள் வெடித்த பூகம்பம் ஒரே இரவில் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய மூவரை கொடூரமாக கொன்ற இளைஞர்ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி செய்த துரோகத்தை தாங்க முடியாத ஆத்திரத்தில் வெறிச்செயல் செய்த விவசாயி கைது 

                  ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அடுத்த புதுகுடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு(30). விவசாய தொழில் செய்து வருகிறார்.  இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (26) என்பவருக்கும் காதல் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளதுஇந்நிலையில் பாலுவின் சித்தப்பா மகனான(பங்காளி) கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த விஜய்(26) என்பவருக்கும் புவனேஸ்வரிக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த தவறான பழக்கத்தால் பாலுவுடன் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு, அவரை பிரிந்து புவனேஸ்வரி தன் தாய் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். கடந்த முறை நடந்த பிரச்சனையால் இருவரும் பிரிந்த நிலையில் கடந்த 1 வருடமாக புவனேஸ்வரி, வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவர் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இருவரும் பிரிந்து வசித்து வரும் சூழலில், தற்போது புவனேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து பாலுவுக்கு கோபம் உச்சம் தலைக்க்கு ஏறியுள்ளது. அந்த ஆத்திரத்தில் பாலு நேற்று இரவு குடிபோதையில் தன் மனைவி புவனேஸ்வரியை கொல்ல திட்டமிட்டு,  கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு புவனேஸ்வரி இவரை கண்டதும் ஓடி ஒளிந்து விடவே, ஆத்திரத்தில் தனது மாமியாரான பாரதியை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.அங்கிருந்து புறப்பட்ட பாலு, அடுத்ததாக தம்பியான விஜயை கொல்ல கொடைக்கல் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு விஜய் வீட்டில் இல்லாத காரணத்தினால் அவரது தந்தையான அண்ணாமலை(52) மற்றும் அவரது தாயான ராஜேஸ்வரி(45) ஆகியோரை இரும்புராடால் தாக்கி கொலை செய்துள்ளார்இதனைத் தொடர்ந்து பாலு வாலாஜா காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்  அவர் கொடுத்த தகவலின் பெயரில் வாலாஜாபேட்டை போலீசார் கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள அவரது மாமியார் பாரதி சடலத்தையும் கொண்டபாளையம் போலீசார் அவரது உறவினரான அண்ணாமலை மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் சடலத்தை மீட்டு  பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருப்பத்தூர்மாவட்டம்   15-5-25


 முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு ஒரு டிவி வாங்கிக் கொடுங்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட முப்படை வீரர்கள் நல சங்கம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே திருப்பத்தூர் மாவட்ட முன்னாள்  முப்படை வீரர்கள் நல சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் முன்னாள் ராணுவ முப்படை  வீரர்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் இழிவாக பேசிய முன்னாள் அமைச்ச் செல்லூர் ராஜுவிற்கு வீட்டில் டிவி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை இல்லை என்றால் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அவருக்கு ஒரு டிவியை வாங்கி கொடுங்கள் 5 வயது சிறுமிக்கு கூட நன்றாக தெரியும் ராணுவ வீரர்களின் செயல்பாடு குறித்து ஆனால் செல்லூர் ராஜுவிற்கு தெரியவில்லை என ஆதங்கத்துடன் கண்டன உரையாற்றியனர். ராணுவ வீரர்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு எதிராக அவரது பேச்சை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தேசிய கொடியை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்

ராணிப்பேட்டைமாவட்டம்     15-5-25


 அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை மற்றவர்களிடம் காட்டட்டும், விவசாயிகளிடம் காட்டினால் தட்டில் சோறு இருக்காது.  விவசாயிகள் எச்சரிக்கை. மேலும் மூட்டைக்கு கூடுதலாக உரிய ரசீது இன்றி ஐம்பது ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு. பாணாவாரத்தில் நடைபெற்ற சாலை மறியல் விவசாயிகள் வேதனை  


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு பாணாவரம் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த நெற்கதிர்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் விற்பனை செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உரிய பணம் வழங்காமல் சுமார் 50 நாட்களுக்கு மேலாக இழுத்து அடித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து விவசாயிகள் பாணாவரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர். 

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை காணப்பட்டது.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை