விருது

தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான
உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து
வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு
முறை விருது தருகிறீர்கள்.

உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து
போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக்
கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது
பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும்,
பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள்
மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில்
மட்டும் தான்.

உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள்
என்னையும் படைத்திருக்கின்றன.

எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில்
ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் !

- கவிஞர் வைரமுத்து .

சூளை கே எம் ஆனந்தன் வேலூர் மாவட்டம் 🙏

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை