செய்திகள்
வேலூர் 21-5-25
அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்புமேலும் இருவர் படுகாயம் குறித்தசிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் (67) இவருடைய மனைவி சுமதி (60) இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தங்களது உறவினர்களை சந்தித்து விட்டு தங்களுடைய சொந்த ஊரான பெங்களூருக்கு செல்ல ராணிப்பேட்டையில் இருந்து ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வரும் வழியில் காட்பாடி தாராப்படவேடு சித்தூர் சாலையில் எதிரில் வந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த சுந்தர வாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
அவருடன் பயணித்த அவருடைய மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டைமாவட்டம் 21-5-25
நெமிலி அருகே கஞ்சா போதை இளைஞர்களின் அட்டூழியத்தை தட்டிகேட்ட வாலிபர் வெட்டி கொலை பிணத்துடன் நீதிகேட்டு மக்கள் சாலைமறியல்
ராணிப்பேட்டை மாவட்டம்நெமிலி அடுத்த வேட்டாங்குளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமத்திற்குள் உளியநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் வந்து தகராறு ஈடுபட்டு போது அவர்களை வேட்டாங்குளம் கிராம பொதுமக்கள் தட்டி கேட்ட நிலையில் இன்று அதே பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் கோபால் பிள்ளை தம்பதியர்களின் ஒரே மகனான தஷ்ணாமூர்த்தி வயது (29) என்பவர் விவசாய நிலத்திற்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் இளைஞரை சரமாரியாக வெட்டி வீழ்த்தியது சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு இதனால் அப்பகுதியில் பரபரப்பு.. இந்த நிலையில் உரிய நீதி கேட்டு 3 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து நெமிலி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
கஞ்சா போதையை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது
வேலூர் 21-5-25
வேலூர் மற்றும் காட்பாடியில் வருவாய்த்துறையின் ஜமாபந்தி இன்று துவங்கியது பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை ஆர்வமுடன் மனுவாக அளித்தனர்
_________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தியானது துவங்கியது வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் தலைமையில் இது நடைபெற்றது இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் சத்துவாச்சாரி வேலூர் சேண்பாக்கம் கொணவட்டம் முள்ளிப்பாளையம் சலவன்பேட்டை சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் இதில் வேலூர் வட்டாட்ச்சியர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இதே போன்று காட்பாடியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியானது சமூக பாதுகாப்பு துறை அலுவலர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது இதில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இதில் காட்பாடி,செங்குட்டை,திருவலம் வள்ளிமலை பொன்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளானோர் வந்து மனுவினை அளித்தனர்
திருப்பத்தூர்மாவட்டம் 21-5-25
நாட்றம்பள்ளி அருகே முறையான மருத்துவம் படிக்காமல் +2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது 2000 ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் நிரல்பிஸ்வாஸ் என்பவரின் மகன் ரத்தின் (எ) பிஸ்வாஸ் இவர் முறையான மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் மூலம், பவுத்ரம், வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தராமன் என்பவர் ரத்தின் (எ )பிஸ்வாஸிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது ரத்தின்( எ) பிஸ்வாஸ் முறையான மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக ஆனந்தராமனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து நேற்று ஆனந்தராமன் மாவட்ட இணை இயக்குனர் மற்றும் மருத்துவர் சுகாதாரப் பணி அலுவலர் ஞானம் மீனாட்சிக்கு புகார் மனு அனுப்பிள்ளார். பின்னர் இது தொடர்பாக மாவட்ட இணை இயக்குனர் ஞானம்மீனாட்சி உத்தரவின் பேரில் நாட்றம்பள்ளி தலைமை மருத்துவர் சிவகுமார் மற்றும் சித்த மருத்துவர் மாலா ஆகியோர் சண்டியூர் பகுதியில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரத்தின் (எ)பிஸ்வாஸ் முறையான மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டது மேலும் அவரிடமிருந்து 2000 ரூபாய் மதிப்பிலான மருந்து மற்றும் சிரஞ்சீ பறிமுதல் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் போலி மருத்துவர் ரத்தின்( எ) பிஸ்வாஸ் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து அவர்களை தவறாக பயன்படுத்திய திமுக பிரமுகர் தெய்வசெயலை கைது செய்ய கோரியும் தமிழக அரசையும் காவல்துறையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்,காவல்துறை அனுமதி மறுப்பு,அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ற மைக் செட் அமைக்க காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் பிளாஸ்டிக் பைபால் மைக்காக பயன்படுத்தி பேசியது அனைவரையும் சிரிக்க வைத்தது
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே தற்போது அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த ஆர்ப்பாட்டமானது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்ததாக திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த தெய்வச்செயல் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் அரசு எனக் கூறி தற்போது கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் கழக செய்தி தொடர்பாளருமான பா.வளர்மதி கலந்துகொண்டு கண்டன உரையை ஆற்றினார்.இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொரடா ரவி, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் .ஹரி ஆகியோர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.இதில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் ஏற்படுவதாக கூறி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment