VITவிழா
வேலூர் 17-5-25
வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் ஸ்டார் திட்ட நாள் விழாவில் மதுகடைகள் மூலம் சமுதாயம் சீரழிகிறது திரைத்துறையினரும் மது அருந்தும் காட்சிகளை காட்ட கூடாது என முன்னாள் மாணவி பேச்சு - கல்வி ஒன்று தான் மாணவர்கள் வாழ்க்கையின் தரத்தை முன்னேற்றும் விவசாயம் செய்யவும் இளைஞர்கள் முன் வரவேண்டும் நடிகர் கார்த்தி பேச்சு
____________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடியில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் மாணவ,ஒரு மாணவனை இவர்களை படிக்க வைக்கும் ஸ்டார் திட்டமான 8 ஆம் ஆண்டு மாணவர் சந்திப்பு கூட்டம் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர் கார்த்தி மற்றும் பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் சேகர்,காதம்பரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள் இதில் முன்னாள் மாணவி மதுரையை சேர்ந்த மாலதி பேசுகையில் பெரும்பாலான மாணவ,மாணவிகள் தாயின் வளர்ப்பில் தான் வளர்ந்து முன்னோற்றம் அடைகிறோம் அதற்கு முக்கிய காரணம் மது தான் மதுவால் தந்தைகள் பலர் கூலி வேலைக்கு போய் சம்பாதித்தாலும் அதனை மதுவுக்காக செலவழித்து குடும்பத்தை மறக்கின்றனர் எனது உறவினர் ஒரு இளம் வாலிபரும் மதுவால் சீரழிந்துவிட்டார் மது வேண்டாம் திரைத்துறைக்கும் நான் வைக்கும் கோரிக்கை மது அருந்தும் காட்சிகளை படம் எடுக்க வேண்டும் அனைவரும் மதுவிற்கு எதிரான முன் எடுப்பை எடுத்து சமுதாயத்தை காக்க வேண்டும் என மதுவிற்கு எதிராக தனது கருத்தை தெரிவித்தார்
பின்னர் விழாவில் திரைப்பட நடிகர் கார்த்தி பேசுகையில் மாணவர்களாகிய உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அளிப்பது பணமோ பொருளோ கிடையாது அதையெல்லாம் யாராவது பிடுங்கி சென்றுவிடுவார்கள் ஆனால் உங்கள் கல்வி மட்டுமே உங்களுக்கு முன்னேற்றம் தரும் விவசாயம் செய்ய கூடாது என பிள்ளைகளை விவசாயிகள் அடிக்கின்றனர் ஆனால் எதிர்காலம் என்பது உணவும் தண்ணீர் சார்ந்து தான் இருக்கும் விவசாயிகள் என்றால் பெண் கொடுக்காத நிலை மாறும் இளைஞர்களும் விவசாயம் செய்ய முன் வரவேண்டும் விவசாயத்தை செய்ய வேண்டுமென பேசினார்
Comments
Post a Comment