குரு ஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா
ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில்
குரு ஸ்தானம் பூஜை மண்டபத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்
வேலூர்,அக்.25-
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் சிறப்பு விழா மற்றும் மகா சண்டி ஓமம் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் சக்தி அம்மா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். ஸ்ரீபுரம் தங்கக் கோவில்களில் நாராயணி அம்மனை தரிசித்த சிவராஜ் சிங் சவுக்கான் மற்றும் அவரது மனைவி சாதனா சிங் சவுகான் ஆகியோர் தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் நடந்த மகா சண்டி யாகம் பூர்ணாயுதியில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment