மத்திய அமைச்சர் பேட்டி
வேலூர் 25-10-25
தமிழகத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் நிதி உதவி திட்டத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது .எனவே தமிழக அரசு தகுதியான விவசாயிகளின் பட்டியலை தயாரித்து உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு நாளை கடிதம் எழுத இருப்பதாகமத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை
அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பேச்சு - நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு காரணம் என கூறுவதற்கு மத்திய அரசு காலதாமதம் செய்யவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பேட்டி
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், இன்று மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.முன்னதாக இயற்கை உரங்கள், பாரம்பரிய நெல் வகை ரகங்கள் .இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் வேளாண் கருவிகள் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.பின்னர் விவசாயிகளுடன்கலந்துரையாடினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,தமிழகத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் நிதி உதவி திட்டத்தில் பல்வேறு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது .எனவே தமிழக அரசு தகுதியான விவசாயிகளின் பட்டியலை தயாரித்து உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு நாளை கடிதம் எழுத இருப்பதாக கூறினார்.தென்னை பயிர் சாகுபடியில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.எனவே விரைவில் விஞ்ஞானிகள் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.தமிழகத்தில் மாம்பழம்அதிக விளைச்சல் இருப்பதால் உரிய விலை கிடைக்கவில்லை எனவிவசாயிகள் தெரிவித்துள்ளனர் எனவே உரிய விலை கிடைக்க தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு புதிய திட்டத்தைமத்திய அரசு விரைந்து நிறைவேற்றும் என்று பேசினார் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.எனவே விரைவில் தமிழகத்தில் இயற்கை விவசாயிகளின் கூட்டம் நடத்தப்படும் .மத்திய அரசு இரண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய தமிழக அரசுஅதற்கான உதவிகளை செய்ய வேண்டும் தன் தானிய கிரிஷ் யோஜனா திட்டத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு 36 திட்டங்களை ஒன்றிணைத்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன் அடிப்படையில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர்திருவண்ணாமலைஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்
முன்னதாக விவசாயிகளுடன் அமைச்சர் சிவராஜ் சிங்க சௌஹான் கலந்துரையாடினார் அப்போது விவசாயிகள் காட்டுபன்றிகளால் பயிர் சேதமடைகிறது அதனை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டுகோள் விடுத்தனர் மேலும் இயற்கை விளைவிக்கபடும் நெல்லை அரிசியாக மாற்ற தனி அரிசி அலைகளை அமைக்க கோரிக்கை வைத்தனர் இவ்விழாவில் தோட்டகலைத்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
பின்னர் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் விவசாயிகளுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். கூட்டாட்சி அமைப்பில், குற்றச்சாட்டு மற்றும் எதிர் குற்றச்சாட்டு மட்டும் இருக்கக்கூடாது, ஆனால் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். நெல் கொள்முதலில் இந்திய அரசு இதுவரை எந்த கொள்முதல் செய்ததில்லை. விவசாயிகளுக்கு சரியான விலையை வழங்குவதற்காக நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளோம், மேலும் கொள்முதல் பணிகளையும் செய்வோம். இன்று, விவசாயிகளை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இங்குள்ள பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு லாபம் ஈட்டுகின்றனர். தமிழ்நாட்டில் சராசரி உற்பத்தித்திறன் 100% உள்ள மாவட்டங்களில் பிரதம மந்திரி தன் தானிய விவசாய திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்துகிறோம்.செயல்பாடு குறைவாக உள்ளது, சராசரிக்கும் குறைவாகவே உள்ளது, நாங்கள் அதை அங்கு செயல்படுத்துகிறோம். பருப்பு வகைகள் மிஷன் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மிஷனையும் நாங்கள் இங்கு செயல்படுத்தியுள்ளோம். இது மாநில அரசுக்கு எனது வேண்டுகோள்.விவசாயிகள் முழுப் பலன்களைப் பெறும் வகையில், இந்தத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது முக்கியம்.தென்னையில் ஒரு நோய் தாக்கியதால், அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக சில விவசாயிகள் தெரிவித்தனர்விவசாயிகள் இந்த நோயை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும் என்பதைத் தீர்மானிக்க முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவை நாங்கள் இங்கு அனுப்புவோம். தமிழ்நாட்டின் சிறந்த மக்களுக்கும் அவர்களின் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் திமுக அரசு விவசாயிகள் காலதாமதம் மத்திய அரசு ஏற்படுத்துவதாக கூறியது குறித்து கேட்டதற்கு வேளாண் திட்டங்களிலும் நெல் கொள்முதலிலும் எந்த காலதாமமுமில்லை என கூறினார்
அப்போது ஒரு நபர் தான் விவசாயி எனவும் சாப்பாடு வழங்கவில்லை எனவும் கூறி தகராறில் ஈடுபட்டார் மற்ற விவசாயிகள் நீங்கள் விவசாயி இல்லை ஏன் தகராறு செய்கிறீர்கள் திமுகவிடம் காசு வாங்கினீர்களா என வாக்குவாதம் செய்த அனைத்து விவசாயிகள் அந்த நபரை அங்கிருந்து அடித்து விரட்டினார்கள் இதனால் பரபரப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment