மழை அவதி
கழிஞ்சூர் ஏரி உபரி நீர் சாலைகளில் புகுந்ததால்
வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதி
ஆந்திராவில் நீர் பிடிப்பு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலம் பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதன் கீழ் உள்ள ராம்சாகர் ஏறி நிரம்பியது.
ராம்சாகர் ஏரியிலிருந்து உபரணி வெளியேற்றப்படுவதால் ஆந்திர மாநில அரசு ஆளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 21 தடுப்பணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வேலூர் பாலாற்றில் அதிக அளவு மழை நீர் செல்கிறது. பாலாற்றில் இருந்து கழிஞ்சூர் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டதால் கவிஞர் ஏரி நிரம்பி uber நீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.
நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக வேலூர் கன்சால்பேட்டை, சீனிவாசா நகர், முள்ளிபாளையம், திடீர் நகர், கொணவட்டம் ,சேண்பாக்கம், சாய் நாதபுரம் உள்ளிட்ட வேலூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைக்காலத்திற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய்களை தூர்வாரி அடைப்புகளை சரி செய்யாததால் கால்வாயில் செல்ல வேண்டிய மழைநீர் , கழிவு நீருடன் வீடுகளை சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக கருஞ்சூர் ஏரியில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்படும் கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கடைகள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு இதேபோல் உபரிமேல் வீடுகளை சூழ்ந்த போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் கண்துடைப்பிற்காக கால்வாய்களை சீரமைத்தனர். ஆனால் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று காலை முதல் கழிஞ்சூர் ஏரியை சுற்றியுள்ள பேங்க் நகர், மதிநகர் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
கால்வாய் நிரம்பி வெளியே செல்லும் மழை நீர் ஓடை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து கழிஞ்சூர் ஏரி வரை உள்ள சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோல் கால்வாயில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாரதி நகர் பிரதான சாலை பகுதிகளில் கால் முட்டி அளவுக்கு மழைநீர் வழிந்து செல்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்தனர். இருப்பினும் சாலையில் செல்லும் மழை நீர் அளவு சிறிதளவு குறைந்தது.
Comments
Post a Comment