இடிப்பு
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிப்பு
நியூஸ் 4 வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 1980-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன மொத்தம் 22 பிளாக்குகளில் 168 வீடுகள் உள்ளன.
இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு சுமார் 45 ஆண்டுகள் ஆவதால் சேதம் அடைந்தும் செடி கொடிகள் மரங்கள் வளர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளன.தொடர்ந்து இந்த கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது அதன்படி 5 பிளாக்குகளில் உள்ள 54 வீடுகளை முதல் கட்டமாக இடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன்படி அந்தக் கட்டிடங்களில் இருந்த ஜன்னல் கதவு உள்ளிட்டவை ஏற்கனவே அகற்றப்பட்டன தொடர்ந்து இன்று பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, கட்டப்பட்டுள்ள 22 பிளாக்குகளில் முதல் கட்டமாக 5 பிளாக்குகள் இடிக்கப்பட உள்ளன. பி.பிளாக்குகளில் 29 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அந்த கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர்.அவர்களின் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் அந்த குடியிருப்புகள் இடிக்கப்பட வேண்டுமா அல்லது புனரமைக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.
Comments
Post a Comment