வெள்ளம்

 ராணிப்பேட்டை மாவட்டம்    


தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை காவேரிப்பாக்கம் சோளிங்கர் நெமிலி அரக்கோணம் ஆற்காடு கலவை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டுவிட்டு லேசாக மழை பெய்துவந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரத்திற்கு தொடர் மழை பெய்து வருகிறது சாலை ஓரமாக மழைநீர் ஆனது பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனோட்டியல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் 

மேலும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது ஏரி குளம் ஆகியவை அதிவேகமாக நிரம்பி வருகிறது

வாணியம்பாடி அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காட்டுக் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 17 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். 

வாணியம்பாடி,அக்.திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திர மாநில எல்லையான தகர குப்பம் அடுத்த ஜோதி நகர் பகுதியில் காட்டு கோயில் அமைந்துள்ளது.

இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு சாமி கும்பிடவும், இறந்தவர்களுக்கு திதி கொடுக்க ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் இருந்து 4 பேரும், குருபானி குண்டா கிராமத்தை சேர்ந்த 8 பேரும், வெள்ள
நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 17 பேர்,(3 குழந்தைகள், 6 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் என மொத்தம் 17 பேர்) சென்றுள்ளனர்.

இன்று காலை வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆட்டோக்களில் தகரக் குப்பம் வரை சென்று அங்கிருந்து ஜோதி நகர் காட்டுப்பகுதிக்கு பாலாற்றைக் கடந்து நடந்து செல்ல வேண்டும். 

காலை நேரத்தில் ஆற்றில் நீர் குறைவாக இருந்தது. திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காட்டுக் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள் அதிர்ச்சடைந்து நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலின் பேரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை பொறுப்பு அலுவலர் சேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு கோயில் பகுதியில் இருந்த 17 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். 

இச் சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி அருகே ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி பாலாற்றில் உபரி நீர் வெளியேறி வருகிறது.
பாலாற்றில் வெள்ளம்

வாணியம்பாடி, அக்.கடந்த சில தினங்களாக கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோலார் மாவட்டம் பேத்தமங்கலம் பகுதி, பாலாற்றின் குறுக்கே உள்ள ஏறி நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் ஆந்திரா அரசால் கட்டியுள்ள அனைத்து தடுப்பணைகள் நிரம்பி பெரும்பள்ளம் என்ற இடத்தில் உள்ள 22 அடி உயரம் கொண்ட தடுப்பணையும் நிரம்பி அதன் உபரி நீர் தமிழக பாலாற்றில் வெளியேறி வருகிறது.

தமிழக பாலாற்றில் நீர் வருவதை பகுதி மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்றனர்.

மேலும் தமிழகத்தில் திருப்பத்துக் மாவட்டம் ஓடும் பாலாறு புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கோ கூடாது, மேலும் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக அளவு  மழை பெய்தால் பாலாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பாக உள்ளது. 

ஆகையால் கரையோரம்  வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம்  ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்