செய்தி

ராணிப்பேட்டைமாவட்டம்   
   24-10-25

 தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 


        ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட மையம்  மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷாகீர் ஜான் வரவேற்புரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயவேல் முன்னிலையில், மாவட்ட கவுரவ ஆலோசகர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். மேலும் மாநில பிரச்சாரச் செயலாளர் என் எஸ் கருணாநிதி சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டமானது ஓய்வு பெற்ற 70 வயது நிறைந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், அங்கன்வாடி ஊட்டச்சத்து பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ, 7850 வழங்கவும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்

வேலூர்      25-10-25 
  

 வேலூரில்   மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி வெப்பம் தணிந்தது 
_________________
      வேலூர்மாவட்டம்,வேலூர்,காட்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று  காலை முதலே மேகமூட்டம்  இருந்தது  இந்த நிலையில்  மழையானது வெளுத்து வாங்கியது இதில் வேலூர் சத்துவாச்சார்,காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைகாற்றுடன் மழையால்  தாழ்வான பகுதிகளில் தண்ணீரும் ஓடியது வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

வேலூர்      25-10-25 
  
 அனைவருக்கும் மக்கள் சேவையாற்றும் நல்ல மனப்பான்மை வரவேண்டும் - உடல் நலனில் ஆண்களும் பெண்களும் அக்கறை செலுத்த வேண்டும் - வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தர்மராஜன் பேச்சு 





வேலூர்மாவட்டம்,வேலூர் காவலர் சமுதாய மண்டபத்தில் தலைமுறைப்பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனையின்  சார்பில் ஊர் காவல்  படைவீரர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் தலைமுறைப்பேரவை நிர்வாகிகள் மாறன் ,பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தர்மராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்  
     பின்னர் விழாவில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தர்மராஜன் பேசுகையில் ஆண்களும் பெண்களும் நவீன காலத்தில் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் வேலையில் மட்டும் கவணம் செலுத்தினால் போதாது 45 நிமிட உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்குள் அப்படி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்  வாழ்க்கை முறையையும் சரியாக அமைத்தால் நீரிழிவு போன்ற நோய்களும் வராது வாழ்க்கையில் எந்த வசதி வாய்ப்பில் இருந்தாலும் மக்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டுமென நினைத்தால் சேவையை செய்யலாம் என பேசினார்

 திருப்பத்தூர்மாவட்டம்        25-10-25 
  
 ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி 50 வது ஆண்டு பொன் விழா கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று ஒருவரையொருவர் சந்தித்து நெகிழ்ச்சி50 லட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு பணிகள் செய்து கொடுத்த முன்னாள் மாணவர்கள் தொழிலதிபர்களுக்கு பாராட்டு 




           திருப்பத்தூர்மாவட்டம்,.  ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் 50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் வேலாயுதம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் கோ வெங்கடேசன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முரளி, மதன், கருணாகரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி ஆனது கடந்த 1975 ஆம் ஆண்டு காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்டு தொடர்ந்து 50 வது பொன் விழா ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியோடு தொடங்கப்பட்டு முன்னாள் மாணவர்களின் பள்ளி அனுபவங்கள் மற்றும் ஆசிரியர்களின் அரவணைப்பு கல்வி குறித்து முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து. பொன் விழா ஆண்டு கல்வெட்டு திறக்கப்பட்டு முன்னாள்ஆசிரியர்கள் மற்றும் முன்னாள்  மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி உள்கட்டமைப்பு பணிகளான குடிநீர் , கழிப்பறை உள்ளிட்ட பணிகளுக்கு உதவி புரிந்து ஏற்படுத்தி தந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு  மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ஆர்.டி எஸ் சரவணன்,சரவணன், பாஜக மாவட்ட தலைவர்  தண்டாயுதபாணி, முன்னாள் தலைவர் வாசுதேவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி குப்புசாமி, தர்மேந்திரா, முன்னாள் மாணவர் ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர் தேவகுமார் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்


பேட்டி: ரவி   (முன்னாள் மாணவர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி  வடபுதுபட்டு)

ராணிப்பேட்டைமாவட்டம்       25-10-25 
  
 சோளிங்கர்  சாலை வசதி மின்விளக்கு வேண்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காற்றம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மலையனூர் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஒதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை ஏரி கரையின் மீது செல்வதால் கரையின் மீது அதிகமான மரங்கள் செடிகள் முழு புதர்கள் இருப்பதினால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும் இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கிறார்கள் மேலும் இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் செல்ல பயப்படுகிறார்கள்மேலும் இந்த சாலை ஐந்து வருடத்திற்கு முன்பாக ஜல்லி சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த சாலையில் அமைக்கப்பட்ட ஜல்லியும் பெயர்ந்து கொண்டு இருப்பதினால் சைக்கிள் டூவீலர் ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்வதற்கும் முடியாமல் நிலை ஏற்படுகிறது கர்ப்பிணிகள் நோயாளிகள் இவர்களை அழைத்துச் செல்ல முடியாத நிலையிம்பள்ளி குழந்தைகள் நடந்து அல்லது மிதிவண்டியில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது அடிக்கடி பள்ளி குழந்தைகள் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஏரியில் விழுந்து விடுவதாகும் தகவல் தெரிவிக்கிறார்கள்கர்ப்பிணிகள் நோயாளிகளை ஏற்றிச் செல்ல சாலை சரியில்லை என்பதினாலும் ஆட்டோ எடுத்து வர மறுக்கிறார்கள்இதனால் என்று காற்றம்பாக்கம் கிராமத்திற்கு உட்பட்ட மலையனூர் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் இன்று காற்றம்பாக்கம் சாலையில் நின்று போராட்டம் நடத்தினார்கள்இது குறித்த மாவட்ட ஆட்சியரிடமும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனுக்கள் மனுக்கள் தரப்பட்டதாகவும் தெரிவித்தனர்இதில் ஏரிக்கரையின் மீது மின்விளக்கு அமைக்க வேண்டும். என்றும் எங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை தார் சாலையாக அமைத்த தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பத்தூர்மாவட்டம்         25-10-25 
 
ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அரை மணி நேரம் கன மழை பெய்தது விவசாயிகள் மகிழ்ச்சி
 

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தன மாலை நேரத்தில் கனமழை சுமார் அரை மணி நேரம் கன மழை பெய்தது ஆம்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் சான்றோர் குப்பம் பெரியாங்குப்பம் கன்னிகாபுரம் வீர கோவில் ஆலங்குப்பம் தேவலாபுரம் ஆகிய கிராமங்களில் கன மழை பெய்தது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்