திருவண்ணாமலையில் அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் பவனி
திருவண்ணாமலை, டிச.1–
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பஞ்சமூர்த்திகள் மகா ரதங்கள் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் முதலாவதாக விநாயகர் தேர், அதன் பின்னால் முருகர் தேரும் சென்றது. இவை இரண்டும் நிலைக்கு வந்ததும் மூன்றாவது பெரிய தேரான அருணாசலேஸ்வரர் மகா ரதம் சென்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். இந்த தேர் நிலைக்கு வந்ததும் இரவு அம்மன் தேர், அதன் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது.
அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்துச் சென்றனர். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment