திருவண்ணாமலை தீபம் விழா கர்பூரம் ஏற்ற தடை
கர்பூரம் ஏற்ற தடை
திருவண்ணாமலை, டிச. 1–
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழா நடந்து வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கார்த்திகை தீபம் திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் திருவிழா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் ஆலைமோதுகிறது.
எனவே பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றக் கூடாது. மேலும் கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டத்திற்குள் செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. மீறி செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment