திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் நாள், நேரம் அறிவிப்பு





கிரிவலம் செல்லும் நாள், நேரம்

திருவண்ணாமலை, டிச.1–

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 3 ம் தேதி  காலை பரணி தீபம், மாலை மகா தீபம் விழா நடக்கிறது. இந்த மாதம்  பெளர்ணமி கிரிவலம் நாள், நேரம்  அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4.12.2025 ம் தேதி வியாழன்   மாலை 7:58 மணி முதல் அடுத்த நாள் 5.12. 2025 ம் தேதி  வெள்ளி   காலை 5.37  மணி வரை கிரிவலம் செல்லலாம்.

 கார்த்தீிகை தீபம் திருவிழா மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 4764 சிறப்பு பேருந்துகள் மற்றும் வேலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் இருந்து 200 தனியார் பேருந்துகள் 24 மணி  நேரமும் இயக்கப்படுகின்றன.

500 ஆந்திர மாநில பேருந்துகள், 20 கர்நாடக மாநில பேருந்துகள், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த 200 படுக்கை வசதிகளுடன்  சொகுசு ஏசி பஸ்கள் இயக்கப்படுகிறது.

பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலையில் 24 தற்காலிக பேருந்து நிலையங்கள், 2325  பேருந்து நிறுத்தங்கள், 130 கார் நிறுத்துமிீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப் பாதை இடையே செல்ல ரூ 10 கட்டணத்தில் மினி பஸ்கள் மற்றும்  இலவச பள்ளி பஸ்கள் 220 இயக்கப்படுகின்றன.

வழக்கமான ரயில்கள் 16 இயக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்