முன்னாள் மாணவர் சங்கம் தொடக்கம்
முன்னாள் மாணவர் சங்கம் தொடக்கம்
காட்பாடி, டிச. 1–
வேலுார் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கம் தொடக்கவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் மாணவி எம்.கலைவாணி தலைமை தாங்கினார். முன்னதாக எம்.கே.சூர்யா வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், மாணவ சங்கத்தினை தொடக்கிவைத்து பேசினார்.
தலைமையாசிரியை எஸ்.ஜெயலட்சுமி, முதுகலை ஆசிரியை எஸ்.நர்மதாபாய் ஆகியோர் முன்னாள் மாணவிகள் சங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என பேசினார்கள்.,
முன்னாள் மாணவிகள் இந்து, எஸ்.லீலாகுமாரி, வி.குமுதா, வி.சுதா, ஆர்.காந்தி, என்.ஜெயந்தி, ஆர்.முனியம்மா, ஜி.லட்சுமி, அர்ச்சனா, மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பேசினர்.
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ஆண்டு விழாவில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.
.தற்போது பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அடுத்த கூட்டத்தினை நடத்துவது என்றும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிற்று கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுப்பது என்றும் அது வரை சங்க அமைப்பாளர்களாக எம்.கலைவாணி, எம்.கே.சூர்யா, டபிள்யு.இந்து ஆகியோர் செயல்படுவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் மாணவ சங்க அமைப்பாளர் டபிள்யு.இந்து நன்றி கூறினார்.


Comments
Post a Comment