Posts

Showing posts from December, 2025

GK வாசன் பிறந்தநாள்

Image
ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை முன்னாள் மாநகர தலைவர் தலைமையில் நடந்தது கடலூர், டிச.28- தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 61-வது பிறந்த நாளையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் முன்னாள் மாநகர தலைவர் ரகுபதி தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் வெள்ளக்கரை பிரேம்குமார், பூண்டியாங்குப்பம் சாம்பசிவம், மகளிரணி ரஞ்சிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பதட்டம்

Image
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* …………………………………………………................. *"பதட்டமும், மன உளைச்சலும்...!* ……………………………………………................ பதட்டமும், மனஉளைச்சலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது... அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும்... உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும், குடைந்து ஓட்டை போடும் எலி... அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால்!, அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு விடும்... நமக்கும் சரி!, சாதாரண எலிக்கும் சரி!, பதட்டமும், மனஉளைச்சலும் பலரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது... *ஆம் நண்பர்களே......

உடனே செய்

Image
இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் அது நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும். நல்ல காரியங்களைத் தாமதமின்றி உடனே செய்.  தன்னம்பிக்கை தெளிவு துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவரை எப்போதும் காப்பாற்றும்.  மாபெரும் செயல்களை சாதிக்க மனதில் தன்னம்பிக்கை பொங்கி வழிய வேண்டும்.  நல்ல பண்புகளை குழந்தைகளிடம் விதைத்தால் நல்ல மனிதனாக உருவாகிவிடுவார்கள்.  கலங்காத உறுதியே கரை சேர்க்கும். பொங்கும் கடலின் நடுவே அமைதியான தீவு இருப்பதுபோல, வாழ்வே போர்க்களமாக இருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும். அந்த அமைதியே வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியை வழங்கும்.  மற்றவர் மீது அன்பு காட்டும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.   அந்தஸ்து பாராத அணுகுமுறையும் உள்ளன்பும் வேண்டும். அன்பு நிறைந்த ஒருவரால் விலங்குகள் படும் துன்பத்தைக்கூட தாங்க முடியாது.

திறமை

Image
*தன்னம்பிக்கை !!* ரயில் நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அந்த வழியாக சென்ற ராம் என்பவர் 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார், பின் அவருக்கு மனதில் ஒரு கருத்து தோன்றியது. உடனே அவர் அந்த பிச்சைக்காரனிடம் சென்று அவருடைய பையில் இருந்த பென்சிலை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்கு சமமான பென்சிலை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சில மாதங்களுக்கு பிறகு ராம் ஒரு விருந்தில் கலந்துக்கொள்கிறார். அந்த விருந்திற்கு இதற்கு முன் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்தவர் கோட் மற்றும் டை அணிந்து விருந்தில் அமர்ந்து இருந்தார். பிச்சைக்காரர் ராமிடம் சென்று நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். ராம் அடையாளம் கண்டு கொண்டார். இப்போது என்ன செய்கிறாய், உடையில் நல்ல மாற்றம் தெரிகிறதே என்னப்பா என்று கேட்டார். அந்த கோட் சூட் மனிதர் நீங்கள் தான் இந்த மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணம் என்றார். என் வாழ்நாளில் மறக்க முடியாத மனிதர் நீங்கள் தான். என்னையும் ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதன் நீங்கள் தான். என் திருவ...

பழக்கம்

Image
பிறரிடம் கைகுலுக்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்.?  உங்களுக்குத் தான் இது.! ஒருவரிடம் பழகும் பொழுது அவருடன் நாம், பேசிப் புரிந்து கொள்வதை விட பார்த்தே பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் உடல் மொழிக்கு அத்துணை வலிமை இருக்கின்றது என்பது மறுக்க முடியாதது. சில சினிமாக்களில் கூட இந்த விதமான வசனங்களைக் காண முடியும், ” என்னைக் காதலிக்கவில்லை என அவள், வாய் கூறியது. வாய் கூறுவது பொய்யெனக் கண் காட்டிக் கொடுத்தது. ” அது என்ன தான் வசனம் என்றாலும் அந்த வசனத்திற்குள் இருக்கும் உண்மையை ஆதரித்துத் தான் ஆக வேண்டும். மனிதர்களிடம் இருந்து உடல்மொழி வெளிப்படும் பொழுது, இதில் பெரும்பங்கு வகிப்பது அவர்களின் கை தான். கைகளின் செயல்பாடுகளின் மூலமே ஒருவரின் மனநிலை அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இரண்டு நபர்கள் சந்திக்கும் போது கை குலுக்குவது இயல்பான செயல். ஆனால், மேலைநாடுகளில் உறவுகள் மேம்பட மிகப் பெரிய பங்கை கைகுலுக்கல்கள் வகிக்கின்றது. ஒவ்வொரு தருணத்திலும் யார் முதலில் கை நீட்டுவது? என்ற ஒரு சிக்கலை ஒவ்வொருவரும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கைகுலுக்க ...

சாக்கடை மனம்

Image
✴️✴️✴️⭕⭕✴️✴️✴️ ஒருவர் நம்மை மட்டம் தட்டி நக்கலாக பேசும்போது, அவர்களை திருப்பி நாம் மட்டம் தட்டி நக்கல் அடித்து பேச வெகு நேரம் ஆகாது. ஆனால், அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கான காரணம்... *நாமும் அவர்களைப் போல சாக்கடை மனம் படைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்கு தான்..!!*

எண்ணங்கள்

Image
❇️❇️❇️💢💢❇️❇️❇️ வீணான எண்ணங்களே *மனதை துன்புறுத்தும் கொடிய சிறையாகும்...* நேர்மறையான எண்ணங்களே *மனதிற்கு உண்மையான சுதந்திரம் தருவதாகும்..!!* ~~~~~~~~~~~~~~~~ Wasteful thoughts are *the cruel prison that torments the mind...* Positive thoughts are *the true freedom that liberates it..!!* *சிந்திப்போம் செயல்படுவோம்!*