திறமை

*தன்னம்பிக்கை !!*

ரயில் நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அந்த வழியாக சென்ற ராம் என்பவர் 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார், பின் அவருக்கு மனதில் ஒரு கருத்து தோன்றியது. உடனே அவர் அந்த பிச்சைக்காரனிடம் சென்று அவருடைய பையில் இருந்த பென்சிலை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்கு சமமான பென்சிலை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

சில மாதங்களுக்கு பிறகு ராம் ஒரு விருந்தில் கலந்துக்கொள்கிறார். அந்த விருந்திற்கு இதற்கு முன் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்தவர் கோட் மற்றும் டை அணிந்து விருந்தில் அமர்ந்து இருந்தார். பிச்சைக்காரர் ராமிடம் சென்று நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். ராம் அடையாளம் கண்டு கொண்டார். இப்போது என்ன செய்கிறாய், உடையில் நல்ல மாற்றம் தெரிகிறதே என்னப்பா என்று கேட்டார். அந்த கோட் சூட் மனிதர் நீங்கள் தான் இந்த மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணம் என்றார்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத மனிதர் நீங்கள் தான். என்னையும் ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதன் நீங்கள் தான். என் திருவோட்டில் 5 ரூபாய் போட்டு பின் அதற்கு இணையாக பென்சிலை எடுத்து எனக்குள் இருந்த வியாபார தன்மையை எனக்கு அறிய வைத்தவர். அந்த நிமிடம் முதல் நான் உழைக்க ஆரம்பித்துவிட்டேன். 

சாகும் போதாவது எதையாவது சாதித்து விட்டு சாகலாமே என முடிவு எடுத்தேன். பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி சொல்ல என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார்.


அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்து இருக்கும்... 
அதை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம்.           😊😊😊

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்