தற்கொலை போலீஸ் குவிப்பு

கண்ணமங்கலம் அருகே 
வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும் என கடிதம் எழுதிவிட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை 
6 டி.எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் குவிப்பு 

சந்தவாசல், பிப்.2-
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த புது பாளையம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன். விவசாயி.இவரது மகன் விஜயகுமார் (வயது 27). பி.ஏ பட்டதாரி. விஜயகுமார் போலீஸ், ராணுவம் மற்றும் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். வேலை கிடைக்காமல் தொடர்ந்து தோல்வியடைந்தார்.இதனால் விஜயகுமார் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினராக இருந்த விஜயகுமார் நேற்று வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்தநாளை கொண்டாடினார்.பின்னர் வீட்டிற்கு வந்த விஜயகுமார் தனது டைரி முழுவதும் வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும் என எழுதினார். பின்னர் டைரியில் எழுதப்பட்ட கடிதத்தை கிழித்து கையில் வைத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். 
இது குறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜயகுமார் எழுதிய கடிதம் மற்றும் டைரியை கைப்பற்றினர்.
வன்னியருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கடிதம் எழுதிவிட்டு விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பா.ம.கவினர் மத்தியில் பரவியது. நேற்று மாலை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் ஏராளமான பாமகவினர் கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் டைரியில் என்ன எழுதி இருக்கிறது என கேட்டு, போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேரம் செல்ல செல்ல பதற்றம் அதிகரித்ததால் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தலைமையில் செய்யாறு, கலசப்பாக்கம், போளூர் டி.எஸ்.பிக்கள் மற்றும் 6 இன்ஸ்பெக்டர் 100-க்கும் மேற்பட்ட போலீசார் புதுப்பாளையம் கிராமத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்