விவசாய கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
விவசாய கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு துணிகளை துவைப்பதற்கு சென்று தவறி விழுந்து பரிதாபம் ராணிப்பேட்டை,பிப்.1– ராணிப்பேட்டை அருகே, கிணற்றிற்கு துணி துவைக்க சென்ற சிறுமிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த ஆரூர் கிராமம், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன்; கூலி தொழிலாளி. இவரது மகள்கள் யுவஸ்ரீ,13; எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.பிரியங்கா,12; ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் பிரியா ,13,; எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் மூவரும் பொன்னம்பலம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் யுவஸ்ரீ, பிரியங்கா, யுவஸ்ரீயின் தோழி பிரியா ஆகிய மூன்று சிறுமிகளும் அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றின் அருகே துணி துவைக்க சென்றதாக கூறப்படுகிறது. இதில் யுவஸ்ரீ எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்ததைக் கண்டு சகோதரி பிரியங்கா மற்றும் தோழி பிரியா ஆகியோர் இருவரும் யுவஸ்ரீயை மீட்க நீரில் இறங்கியுள்ளனர்...