கொலை
*ஆம்பூர் அருகே மதுபோதையில் நண்பனை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த நபர் கைது.*
*ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை..*
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்புன் கூலி தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரும், நண்பர்களான நிலையில், நேற்று இரவு இருவரும், ஒன்றாக அப்பகுதியில் உள்ள வெல்டிங் கடை எதிரே மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர், அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த கோகுல் பீர் பாட்டிலால், அப்புன் தலையில் தாக்கியுள்ளார், இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்புன் மீது அங்கிருந்த டிரம்மை தூக்கிபோட்டு கொலை செய்துவிட்டு, அங்கேயே கோகுல் அமர்ந்திருந்துள்ளார், உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், அப்புன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இக்கொலைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, கொலை செய்து விட்டு, அங்கேயே அமர்ந்திருந்த கோகுலை கைது செய்து, கோகுலிடம் மேலும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் மதுபோதையில் நண்பனை பீர்பாட்டில் மற்றும் டிரம்மால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Comments
Post a Comment