விவசாய கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
விவசாய கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு
துணிகளை துவைப்பதற்கு சென்று தவறி விழுந்து பரிதாபம்
ராணிப்பேட்டை,பிப்.1–
ராணிப்பேட்டை அருகே, கிணற்றிற்கு துணி துவைக்க சென்ற சிறுமிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த ஆரூர் கிராமம், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன்; கூலி தொழிலாளி. இவரது மகள்கள் யுவஸ்ரீ,13; எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.பிரியங்கா,12; ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் பிரியா ,13,; எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் மூவரும் பொன்னம்பலம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் யுவஸ்ரீ, பிரியங்கா, யுவஸ்ரீயின் தோழி பிரியா ஆகிய மூன்று சிறுமிகளும் அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றின் அருகே துணி துவைக்க சென்றதாக கூறப்படுகிறது.
இதில் யுவஸ்ரீ எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்ததைக் கண்டு சகோதரி பிரியங்கா மற்றும் தோழி பிரியா ஆகியோர் இருவரும் யுவஸ்ரீயை மீட்க நீரில் இறங்கியுள்ளனர்.
நீச்சல் தெரியாத 3 சிறுமிகளும் ஒருவர் பின் ஒருவராக நீர் நிறைந்த கிணற்றில் மூழ்கி இறந்தனர். நீண்ட நேரம் சிறுமிகள் வராததைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தேடிச்சென்ற போது குட்டையின் அருகே துணிகள் கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் வாழைப்பந்தல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலவை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் யுவஸ்ரீ மற்றும் சகோதரி பிரியங்கா ஆகியோரின் உடலை சடலமாக மீட்டனர்.
மேலும் இவர்களுடன் நீரில் மூழ்கிய பிரியா உடலை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் , இரவு 8 மணி அளவில் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர் . சம்பவம் குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மீட்கப்பட்ட 3 சிறுமிகளின் சடலங்களை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனது.
Comments
Post a Comment