போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதை பொருள் ஒழிப்பு
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பத்தூர்:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பத்தூரில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பாக 30.01.2027 அன்று மதியம் 2.00 மணிக்கு *"போதை இல்லா சமூகமே வளர்ச்சிக்கு ஆதாரம்" என்ற தலைப்பில்* போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கந்திலி காவல்துறை ஆய்வாளர் திரு மேன்லி லாமேக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருள் வகைகள், போதைப் பொருளினால் மனித சமுதாயத்திற்கு விளையும் தீங்குகள், போதை பொருள் பயன்படுத்தினால் தண்டனை தரும் சட்டங்கள், போதைப் பொருளிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று மாணாக்கர்களிடையே உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ப. குமரேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வு போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ல ரூபா அவர்கள் ஒருங்கிணைத்தார். இதில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment