Posts

Showing posts from October, 2024

ஆர்பாட்டம்

Image
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று இனிதே சிறப்பான முறையில் நடைபெற்ற   மாவட்ட நிர்வாகத்திற்கான  எச்சரிக்கை ஆர்ப்பாட்டம். இராணிப்பேட்டை பாலாற்றை கரையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், பாலாற்றை பாழ்படுத்தி கொண்டு இருக்கும்  அரசு சாராய மதுபான கடையை உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்தவில்லை என்றால்  ,  மது ஒழிப்பு போராளி மருத்துவர் அய்யா மற்றும் இளைஞர்களின் நம்பிக்கை நாயகர் மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி இராமதாஸ் MP அவர்களின்  ஆணையின்படி..... இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மதுக்கடைக்கு பூட்டுபோடுவோம் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது...  அன்புடன்.... ப.சரவணன் (எ) வேலவன் DME மாவட்ட செயலாளர் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்  ந.சுப்பிரமணி மாவட்ட தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  ந. கிரிகுமரன், SLS மூர்த்தி, கீழ்மின்னல் நடராஜ்  மாவட்ட வன்னியர் சங்க செயலாளர், தலைவர்  வ.மணிவண்ணன், அ.ப.லட்சுமணன் மாநில பசுமைத் தாயக துணை செயலாளர் டி.டி.மகேந்திரன் மாவட்ட அமைப்பு செயலாள...

சந்திப்பு

Image
🔸  *25.10.1984 ஆம் ஆண்டில் காவல் துறையில் காவலர்களாக சேர்ந்து பணியில் பதவி உயர்வு பெற்று உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள காவல் துறையினர் 52 பேர் 40 ஆம் ஆண்டு விழாவில் மற்றும் சிறப்பு விருந்தினராக இரண்டு பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியவர்கள். பாலாஜி ஆய்வாளர் ஓய்வு, உதவி ஆய்வாளர்கள் ஓய்வு ஆனந்தன், சேவியர், ரவி, துரையரசன், ரவி, சுப்பிரமணி ஆகியோர் நடத்தினர். சிறப்பு விருந்தினர் திரு. பஞ்சாட்சரம் துணைக் கண்காணி ப்பாளர் சிறப்புரையாற்றி அனைவரையும் வாழ்த்தினார்.*

மாநாடு

Image
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட,  22வது டாக்டர் ஏ.எஸ்.  ஃபென் அறுவை சிகிச்சை  CME கருத்தரங்கு (2024) இன்று தொடங்கியது. இந்த மூன்று நாள் தொடர் மருத்துவக் கல்வி (CME) நிகழ்வு அக்டோபர் 17 முதல் 19, 2024 வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் ஏ.எஸ். ஃபென், ஒரு முன்னோடி அறுவை சிகிச்சை நிபுணரும், வேலூர் CMCH இல் அறுவை சிகிச்சை துறையின் முன்னாள் தலைவருமானவர். இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கற்பித்தல் மற்றும் பயிற்சி அளிப்பதில் அவர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார். இந்த வருடாந்திர நிகழ்வு பொது அறுவை சிகிச்சையில் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் பயனடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு மதிப்புமிக்க மருத்துவ நிறுவனங்களின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பதிவு செய்து, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வின் மருத்துவ வழக்கு விவா...

தானம்

Image

அஞ்சலி

Image
*⛳ வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோட்டை ஆலயத்தில்🛕*  *🇮🇳 பத்ம விபூஷன் ஸ்ரீ ரத்தன் நவல் டாடா அவர்களின்  💎* *🩷 ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் 🪔*    *🕉️ 25 10 2024 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6:00  மணிக்கு  🕕* *🚩 ஆலய வளாகம் ஸ்ரீ நடராஜர் மண்டபத்தில்  🔥* ஏற்றப்பட்டது. *🕸️ நல்லோர்களின் நல்வழியில் 🙏🏻 ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம்  &  வேலூர் அன்பு நெஞ்சங்கள்  💖*  *📱 விவரம் அறிய  :  93 45 45 76 76  👈*

மீட்பு

Image
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  24.10.2024-ம் தேதி காலை 11:00 மணியளவில் செல் ட்ராக்கர் மற்றும் CEIR போர்டல் மூலம் மீட்கப்பட்ட 200 தொலைந்த செல்போன்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.நா.மதிவாணன்* அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

விழா

Image
வேலூர்    மாணவிகள் கைபேசியை விடுத்து கல்விக்கும் அவர்களுக்கான முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் டி.கே.எம் கல்லூரியில் பட்டங்களை வழங்கி பேச்சு  __________________________________________________________         வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவானது கல்லூரியின் தலைவர்  சிவக்குமார் தலைமையில் நடந்தது இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் பானுமதி உள்ளிட்டோரும் திரளான மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும்  கலந்துகொண்டனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் கலந்துகொண்டு 1137 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் இதில் தரவரிசை பெற்ற 93 மாணவிகள் ரூ.2.   19 லட்சம் மதிப்பில் பண பரிசுகளும் வழங்கப்பட்டது         இவ்விழாவில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் பேசுகையில்  மகளிர்கள் இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக கல்வி கற்க காரணமே தந்தை...

போட்டி

Image
வேலூர்        வேலூரில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு  ___________________________________     வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில்  தமிழ்நாடு சிலம்பம் சங்கமும் மாவட்ட சிலம்பம் சங்கமும் இணைந்து மாநில அளவிலான சிலம்பம் போட்டிகளை அகில சிலம்பம் சங்க தலைவர் சந்தோஷ்குமார் துவங்கி வைத்தார் இதில் தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களை சேர்ந்த முதலிடம் வென்றவர்கள் மட்டும் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர் 6 வயது முதல் 19 வயது வரையில் 14 பிரிவுகளாக ஆண்கள் பெண்கள் தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்பார்கள் மாணவர்கள் தங்களின் பாரம்பரிய சிலம்பக்கலைகளையும் செய்து காட்டினார்கள் இதில் கோப்பைகளும் வழங்கப்பட்டது இவ்விழாவில் பயிற்சியாளர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்  '

முக்கியம்

Image
*ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான செய்தி!*   *💁‍♂️ ஓய்வூதியம் பெறுவோர் எதிர்காலத்தில் உயிர்வாழ்வதற்கான சான்றுகளை வழங்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் மத்திய அரசு வேறுபட்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது.*  ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் உயிர்வாழ்வதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை என்றால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.  ஆனால் இப்போது ஓய்வூதியம் பெறுவோர் இந்த சிரமத்திலிருந்து விடுபடுவார்கள்.  ஓய்வூதியம் பெறுவோருக்கு முகத்தை அடையாளம் காணும் முறை என்ற உயர் தொழில்நுட்ப தொழில்நுட்பத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.  புதிய தொழில்நுட்பத்தின்படி, ஓய்வூதியம் பெறுபவரின் முகமே அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு சான்றாக இருக்கும்.   புதிய தொழில்நுட்பத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.  *முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் என்றால் என்ன?*  இதன்படி வங்கி உயிர்வாழ்வதற்கான ஆதாரத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டியதில்லை.  வங்கி அதிகாரிகள், ஓய்வூதியதாரர்களின் முகங்களை மொபைல் செயலி மூலம் சரிபார்ப்பார்கள்...

கோவில்

Image
தந்தைக்கு  கோவில் கட்டி வணங்கும்  சமூக சேவகர் மணிமாறன் திருவண்ணாமலை; செ.2 அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்னை ,தந்தைக்கு மற்ற உறவுகள் ஈடாகாது என்பது  நம் முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய காலகட்டம் முற்றிலும் மாறிவிட்டது. பெற்றெடுத்த தாய்+ தந்தையை அருகில் வைத்து பார்க்க மனமில்லாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடும் அவலம் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும்  அரங்கேறி வருகிறது.  இந்த கடினமான காலகட்டத்திலும் தாய் தந்தையின் மீது அன்பு கொண்ட மகன்களும் இருக்க தான் செய்கிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு இளைஞர், மறைந்த தனது தந்தைக்கு சிவாலயம் அமைத்து வழிபட்டு வருகிறார். அது பற்றிய விவரங்களை காண்போமா!  திருவண்ணாமலை மாவட்டத்தில் தலையாம் பள்ளம் என்ற கிராமம் உள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அங்குள்ள ஒரு விவசாய குடும்பத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு மகனாக பிறந்தார் பாண்டுரெங்கன். 3.4 1955 ஆம் ஆண்டு பிறந்த பாண்டுரெங்கன். அவர் வசித்த கிராமத்தில் நிலம் வாங்கி விவசாய தொழிலில் ஈடுபட்...