மாற்றம்
பெண் டாக்டர் கூட்டு
பாலியல் பலாத்காரம்
வழக்கு
வேறு நீதிமன்றத்திற்கு
மாற்றம்
வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் 17 ம் தேதி ஆட்டோவில் நான்கு பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
வேலுார் வடக்கு போலீசார், வ.உ.சி., நகரை சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் சிறுவர் என ஐந்து பேரை கைது செய்தனர்.
நான்கு பேர் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும், சிறுவர் சென்னை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
சிறுவர் தவிற மற்றவர்கள் குண்டர் சட்டத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை வேலுார் மகிளா கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளைக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் இந்த வழக்கு வேலுார் மகிளா விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
17 வயது சிறுவனுக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை வேலுாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
இதனால் மற்ற குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை சிறுவனுக்கும் கிடைக்கும் என போலீசார் கூறினர்.
Comments
Post a Comment