போராட்டம்
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திலிருந்து தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது என கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற கோரி ஆர்பாட்டம் மற்றும் போராட்டம் வேலூர் வேலூர்மாவட்டம்,வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது இதில் கூட்டம் துவங்கியவுடன் அனைத்து விவசாயிகள் சங்கமும் தமிழக அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என்பது தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவும் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக கூறி பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பி வண்ணம் அனைத்து விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்தனர் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் செய்ததுடன் விவசாயி தரையில் புரண்டு மார்பில் அடித்துகொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது ராணிப்பேட்டையில் ...