Posts

Showing posts from March, 2026

உலக இட்லி தினம்

Image
 _________________ నేడు ప్రపంచ ఇడ్లీ దినోత్సవం సందర్భంగా' కవిత ' _________________ ప్రియురాలి 'బుగ్గల్లా'గా మెత్తగా ఉంటావు  అందమైన హంసలాగా  తెల్లగా ఉంటావు! ప్రేయసిపై... ప్రేమకు  వయసు తీరినాక...  ఒకనాడు పుల్ స్టాప్ ఉంటుంది! కానీ నీ మీద మాత్రం.... బాల్యం నుంచి వృద్ధాప్యం దాకా.... అదే మోజు....  నీది కూడా అదే ఫోజు! నిన్ను చూస్తే... మనసు ఊరుతుంది! దానితోపాటు  నోరు కూడా రెడీ!  గుమఘమలాడే . సాంబార్లో కలిపి...  నిన్ను ఆస్వాదిస్తుంటే స్వర్గాలు కనిపిస్తాయి!! ఈ రహస్యం ఒడిసిపట్టారు కాబట్టే... తమిళ సోదరులు.. మద్రాస్ సాంబార్ ఇడ్లీకి..... ఇంటర్నేషనల్.... బ్రాండ్ గా మారారు!! కమ్మని గేదెనెయ్యుతో కారప్పొడితో నిన్ను అద్దుకుంటూ.. అద్దుకుంటూ తింటుంటే... ఆనందానికి హద్దులు లేవు అనిపిస్తుంది! అల్లం బెల్లం కలిపిన తియ్యని చట్నీతో తింటుంటే...  అమృత పాత్ర అరచేతిలో ఉన్నట్లు ఉంటుంది.  ఇక సెనగపప్పు , కొబ్బరి కలిసిన చెట్నీ అయితే చెప్పాల్సిన పనిలేదు!! దాని రుచే వేరు!! దాంట్లో మంచి తాళింపు ఉంటే... తాతగారికి సైతం  హుషారు వస్తుంది!! చిట్టి ,పొట్టి ,ఇడ్...

ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வேலு வெற்றி பெற வேண்டும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Image

அதிமுக கூட்டணிக்கு கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Image
அதிமுக கூட்டணிக்கு கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பேச்சு  திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே திராவிட முன்னேற்றக் கழக வந்தவாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ். அம்பேத்குமார் அவர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது ஜாடிக்கேத்த மூடி என்பது போல மோடிக்கு ஏத்த ஜடியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்றும் அதிமுக கூட்டணிக்கு கேரண்டியும் கிடையாது வாரண்டியும் கிடையாது இப்போது நடைபெறுகின்ற தேர்தல் டெல்லிக்கா தமிழ்நாட்டுக்கா என்ற தேர்தல் அதில் நாம் வெற்றி அடைய வேண்டும் நீங்கள் எப்போதே முடிவு எடுத்து விட்டீர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்துள்ளது மகளிர் விடியல் பயண திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் புதுமைப்பெண் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இவை உள்பட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்துள...

இ கம்யூ தேர்தல் அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் இன்று வெளியிடப்பட்டது இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. சென்னை, தியாகராயர் நகர், 43, செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் காலை  11 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன் முக்கிய அம்சங்களை விளக்கி ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.  முதல் பிரதியை கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி பெற்றுக் கொண்டார்.  இந்நிகழ்வில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவர், கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பி...

த வெக தலைவர் விஜய்க்கு இ கம்யூ கண்டனம்

வாக்காளர்களை பணம் வாங்கச் சொன்ன தலைவர் மீது,  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு விஜய், தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, “ஆயிரம், 2 ஆயிரம்,  5 ஆயிரம் என்று கொடுப்பார்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்.” என்று பேசியுள்ளார். இந்தச் செய்தி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விரிவாக வெளியாகியுள்ளது. திரு விஜய், பேச்சு “தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் முறைகளை தகர்க்கும் செயலாகும். இந்த விதிமுறை மீறல் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் மாதிரி விதிமுறைகளை மீறியுள்ள ...

இ கம்யூ கட்சி தேர்தல் சுற்றுப்பயணம்

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின்  தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்  தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.  அவரது சுற்றுப் பயண விபரம்: தேதி கிழமை தொகுதி 02.04.2026 வியாழன் இராஜபாளையம் 03.04.2026 வெள்ளி கோவில்பட்டி 04.04.2026 05.04.2026 சனி ஞாயிறு சென்னை 06.04.2026 07.04.2026 திங்கள் செவ்வாய் செங்கல்பட்டு திண்டிவனம் 08.04.2026 09.04.2026 புதன் வியாழன் சென்னை 10.04.2026 வெள்ளி திருப்பத்தூர் 11.04.2026 சனி தளி 12.04.2026 ஞாயிறு பவானிசாகர் 13.04.2026 திங்கள் திருப்பூர் 14.04.2026 செவ்வாய் ஸ்ரீவில்லிபுத்தூர் 15.04.2026 புதன் தஞ்சாவூர் 16.04.2026 வியாழன் திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர் 17.04.2026 வெள்ளி கும்பகோணம் 18.04.2026 சனி காட்டுமன்னார்கோவில் 19.04.2026 ஞாயிறு அரக்கோணம் 20.04.2026 21.04.2026 திங்கள் செவ்வாய் சென்னை (எம்.ஆர்.ரகுநாதன்) அலுவலகச் செயலாளர்

கடமை

Image
*🔸திமுக கூட்டணிக்கு செ.கு.தமிழரசன் ஆதரவு* சென்னை: *📍. “திமுக கூட்டணியை ஆதரிப்பது அம்பேத்கர் இயக்கங்களின் தலையாய கடமை. அம்பேத்கரிஸ்டுகளை ஒருங்கிணைத்து திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்”* *முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பின் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி*

வராதே

   புங்கம்பட்டு நாடு பகுதியில் தயவுசெய்து எங்க ஊருக்கு ஓட்டு கேட்க வரவேண்டாம் என வினோத பேனர்  திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, பொதுமக்கள் வினோத பேனர் ஒன்று வைத்தனர் அதில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் தயவு செய்து யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் எனவும் போலியான மற்றும் அரசு அங்கீகரிக்கப்படாத பழங்குடியினர் அல்லது வழங்கிய போலி ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் போலிச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 80ஆண்டு காலமாக எங்கள் ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் உள்ளது வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் குடிநீர் வசதி வேண்டும் நியாய விலை கடை வேண்டும்,மேலும் ஜவ்வாது மலை பல்வேறு பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லை, மேலும் போலியானவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர் அதனை ரத்து செய்ய பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லைஎனவே தயவு செய்து எங்க ஊருக்கு ஓட்டு கேட்க யாரும் வர வேண்டாம் என வினோத பேனரை வைத்துள்ளனர். 

செய்திகள்

Image
வாணியம்பாடியில் போதை மாத்திரைகள் வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது அவர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை  திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புனேவிலிருந்து 1200 போதை மாத்திரைகள்  ரயில் மூலம் கடத்தி வரப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லும் முயன்ற கோவையைச் சேர்ந்த 6 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர் இந்த நிலையில் மீண்டும் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் 500 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ்(24), திலீபன் (22) ஆகியோர் என தெரியவந்தது ஏற்கனவே போதை மாத்திரை கடத்தல் சம்பவத்தில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்துள்ளது வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது   காட்பாடியில் தாராப்பபடுவேடு...

ஊர்வலம்

Image
வேலூரில் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க குதிரைகளுடன் ஊர்வலம்  வேலூர்       வேலூர்மாவட்டம்,வேலூர் பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள சம்பவ்நாத ஜெயின் ஆலயத்திலிருந்து இன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள் பின்னர் குதிரைகளுடன் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திரு உருவ படம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து குதிரைகள் முன்னர் செல்ல மேளதாளங்ககுடன் நடனமாடிய படி ஜெயின் சமுதாய ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாடல்களை பாடிய படி ராஜேஷ்குமார் ஜெயின் தலைமையில் பிரகாஷ் ஜெயின் ஊர்வலத்தை துவங்கி வைக்க ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக வேலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது இந்த ஊர்வலத்தில் ஜெயின் மதகுரு பக்தி ரத்னா சுரிஷ் சர்ஜி உள்ளிட்ட திரளான ஜெயின் சமுதாயத்தினர் பங்கேற்று  உயிர்களை கொல்ல கூடாது மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் இந்த ஊர்வலமானது காந்திரோடு,பி.எஸ்....

அன்னதானம்

Image
அன்னதானம் வேலூர் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் வணக்கம்*🙏 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷                   30.03.26  பிரதோஷம்  தொடங்கி 31.03.26 அன்றும் நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக அன்னதானமும்  தொடர்ந்து  01.04.26 பௌர்ணமி  அன்று  சாதுகார மடம் சார்பாக 500 பேருக்கு அன்னதான செய்ய திட்டமிடப்பட்டுள்ளதில் நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக  இரண்டு மூட்டை அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு  30.03.26  பிரதோஷ நன்நாளான நேற்று மதிய உணவு  சாதுகாரமடத்தில் அன்னதானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.                     🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

பாராட்டு விழா

Image
*ஓய்வு பெறும் சமூக நீதி விடுதி சமையலர் ஜெ.சங்கருக்கு இராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு*  வேலூர் தமிழ்நாடு அரசின் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதியின் சமையலர் ஜெ.சங்கர் 31.03.2026ல் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு இன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழவில் மாவட்ட நல அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு கேடையம் வழங்கி பாராட்டினார்.   இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு துணை ஆட்சியர் டி.மீனா தலைமை தாங்கி பணி நிறைவு பெறும் ஜெ.சங்கர் ஆற்றிய பணிகளை பாராட்டி கேடையம் வழங்கி பேசினார். ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்ள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் தலைவருமான முனைவர் செ.நா.ஜனார்த்தனன் சால்வை அணிவித்து பாராட்டி...

அன்னதானம்

Image
தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவின்  ஆறாம் நாள் 63நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு  19ஆம் ஆண்டு அன்னதானம் வேலூர் தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் சார்பாக  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய    பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்  63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 19ஆம் ஆண்டு அன்னதான விழா காஞ்சிபுரம் ஓங்கோல் சங்கர பத்தர் 16 கால் மண்டப சத்திரத்தில் நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன்  தலைமை தாங்கி அன்னதானத்தினை தொடக்க வைத்தார்.  காஞ்சிபுரம் மாவட்ட குழுவின் ஆர்.குமாரசாமி, க.சங்கரநாராயணன், எஸ்.சிவக்குமார்ஆகியோர்  அன்னதானம் வழங்கும் பணியினை               மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்      ஜி.கருணாகரன்,  குப்புசாமி, என்.ராஜேந்திரன், என்.அருண்க...

பாராட்டு விழா

Image
பணி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி காசாளர் தினகரனுக்கு  சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பினர் பாராட்டு வேலூர் சிவில் ஓய்வூதியம் பெறுவோர் கூட்டமைப்பின்  சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் செங்காடு இந்தியன் வங்கியின் காசாளராக 26 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற அ.தினகரனுக்கு பாராட்டு விழா வங்கி கிளை வளாகத்தில் நடைபெற்றது.   இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் விகாஸ் சோப்ரா தலைமை தாங்கினார்.   உதவி மேலாளர் போஸ் சந்திரகாந்த் வரவேற்றுப் பேசினார்.  வங்கி அலுவலர்கள் ரஞ்சித்குமார் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வங்கியின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.  சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பிலும் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பொன்னாடை போர்த்தி பாராட்டி பேசினார்.  ஓய்வு பெற்ற சார் பதிவாளர் க.சக்கரவர்த்தி, சென்னை ச.கோபாலகிருஷ்ணன், ஆற்காடு ஜி.கணேஷ், நகை மதிப்ப...

பாராட்டு விழா

Image
வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பாராட்டு வேலூர்: அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் பள்ளிக் கல்வித் துறையின் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இந்த கல்வியாண்டில் இறுதி நிகழவாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கருத்தாளர்களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வேலூர் மாவட்ட அளவிலான வானவில் மன்றத்தின் கருத்தாளர்கள் மார்ச் மாத மீளாய்வு வேலை அறிக்க சமர்பித்தல் மற்றும் கருத்தாளர்களின் பணிகளை பாராட்டி கேடையம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகல்வி கூட்ட அரங்கில் நடைபெற்றது.  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்கள் பங்கேற்று கருத்தாளர்களின் வேலை அறிக்ககளை ஆய்வு செய்தார் மேலும் அவர்களின் பணிகளை பாராட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட பாராட்டு கேடையங்களை வழங்கி பேசினார்....

வேட்புமனு தாக்கல்

Image
   குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இமலன் வேட்புமனு தாக்கல் செய்தார் குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம், 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில்,குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இமலன் கட்சி நிர்வாகிகளுடன் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வேட்பாளர் உட்பட ஐந்து பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் வேட்பாளர் உடன் வந்த கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது மேலும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரியும் குடியாத்தம் கோட்டாட்சியருமான சுபலட்சுமி யிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இமலன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

எச்சரிக்கை

எச்சரிக்கை சென்னை உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்) ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது, எனவே யாராவது மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறையின் கதவைத் திறந்து வைக்கவும், மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், மொபைல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது, தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் மக்களுக்குத் தெரிவிக்கவும், தயிர், மோர், மர ஆப்பிள் சாறு போன்ற குளிர் பானங்களை முடிந்தவரை பயன்படுத்தவும். மிக முக்கியமான தகவல் குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை பின்வருவனவற்றை எச்சரிக்கிறது. வரும் நாட்களில் 47 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான பகுதிகளில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் குவி மேகங்கள் இருப்பதாலும், இங்கே சில எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் உள்ளன.  இவற்றை கார்...

தேர்தல் விழிப்புணர்வு வாசகம்

Image
வேலூரில் 100 சதவிகிதம் வாக்குபதிவு வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மலர்களால் மை வோட் மைப்யூச்சர் என வடிவமைத்து 100 சதவிகிதம் வாக்களிப்பை விழிப்புணர்வு செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு ஊர்வலம் - வேலூரில் 100 சதவிகிதம் வாக்களிப்பை அனைவரும் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு  வேலூர்      வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை வெளி பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையத்தின் சார்பில் 100 சதவிகிதம் வாக்களிப்பை வலியுறுத்தி வண்ண மலர்களை கொண்டு 100 சதவிகிதம் வாக்களிப்போம் மை வோட் மை ப்யூச்சர் வேலூர் என வடிவமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர் இதில் 100 சதவிகிதம் வாக்களியுங்கள் இப்படிக்கு வேலூர் கோட்டையன் என்ற எறும்பு திண்ணியின் விழிப்புணர்வு வீடியோவை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார் மேலும் கோட்டை வெளிபூங்காவிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் கையில் 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு...

வேட்புமனு தாக்கல்

Image
வேட்டிமனு தாக்கல் வேலூர் *நாம் தமிழர் கட்சி வேலூர்* சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி *ஆ.சோனியா* அவர்கள் இன்று 30 மார்ச் 2026 பகல் 1:30 மணி அளவில் *வேட்பு மனு தாக்கல் செய்தார்.*

பிரசாரம்

Image
*காட்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் V. ராமு அவர்கள் காட்பாடி செங்குட்டை பகுதியில் பிரச்சார பரப்புரை மேற்கொள்ளும் போது மட்டன் கடையில் கறியை வெட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.* செய்தி A. தினகரன் செல்:9443403480

கறிக்கடையில் அதிமுக வேட்பாளர் ராமு பிரசாரம்

Image
*காட்பாடியில் அதிமுக வேட்பாளர் வி. ராமு தீவிர வாக்கு சேகரிப்பு, கறிக்கடையில் கறி வெட்டி நூதன பிரச்சாரம்!* காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் வி. ராமு இன்று தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று  காட்பாடி செங்குட்டை பகுதியில் உள்ள பாரதியார் தெருவில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய வி. ராமு, வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காட்பாடி சித்தூர் சாலையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்குச் சென்ற வேட்பாளர், அங்குள்ள கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் ஆதரவு கோரினார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சித்தூர் சாலையில் இருந்த ஒரு ஆட்டுக்கறி கடைக்கு வேட்பாளர் வி. ராமு சென்றார். அங்கு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்ததோடு மட்டுமல்லாமல், கையில் கத்தியை எடுத்து ஆட்டுக்கறியை வெட்டி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். வேட்பாளரின் இந்த நூதன ...

வேட்புமனு தாக்கல்

Image
*காட்பாடி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருகுமரன் தேர்தல் நடத்தும் அலுவலர் மாறன் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்... செய்தி A - தினகரன் செல்:9443403480

காட்பாடியில் 13 வது முறை போட்டியிடும் துரைமுருகனுக்கு வரவேற்பு

Image
வேலூர் காட்பாடியில் 13வது முறை போட்டியிடும் துரைமுருகன்: “வாக்காளர்களே தெய்வங்கள்” என பணிவான கோரிக்கை. “செய்த பணிகள் மக்களுக்கு தெரியும்” – எதிர்க்கட்சிக்கு துரைமுருகன் பதில் வேலூர் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 13வது முறையாகவும், அதில் 11வது முறையாக காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிடவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் இன்று சென்னை நகரிலிருந்து ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையம் வந்தார். அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்ற அவர், அண்ணா, பெரியார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய துரைமுருகன், “காட்பாடி வாழ் தெய்வங்களுக்கு பணிவான வணக்கங்கள்” என தனது உரையை தொடங்கினார்.  “என்னை மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தலைவருக்கும், என்னை அன்புடன் வரவேற்ற உங்களுக்கும் என...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதியநீதிக்கட்சிதொகுதி பங்கீடு

Image
இன்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களைப் புதிய நீதிக்கட்சித் தலைவர் Dr. ஏ.சி. சண்முகம் அவர்கள் நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  மாற்றத்தை நோக்கி நம்பிக்கையுடன் தொடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பயணத்தில் உடனிருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்! என ஏ. சி.சண்முகம் கூறினார். செய்தி A. தினகரன் செல் 9443403480

பறிமுதல்

Image
சேர்க்காடு சோதனை சாவடியில்  தெலுங்கானா ஐ.டி ஊழியரிடம் ரூ 2.41 லட்சம் பறிமுதல் வேலூர்  வேலூர் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், பங்கல பெட்டாவை சேர்ந்தவர் சங்கர் ரெட்டி (வயது 40). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியா நிறுவனத்தில் ஐ.டி ஊழியராக வேலை செய்து வருகிறார். தனது மகனின் திருமணத்திற்காக பட்டு புடவை, வேஷ்டி சட்டை வாங்குவதற்காக  குடும்பத்தினருடன் காரில் காஞ்சிபுரத்திற்கு வந்து கொண்டு இருந்தார். காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 1:30 மணிக்கு அந்த வழியாக வந்த சங்கர் ரெட்டியின் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரூ 2 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது. காரில் இருந்த பணத்திற்கு சங்கர் ரெட்டியிடம் உரிய ஆ...

3 பேர் பலி

சிப்காட் அருகே ஏரியில் குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி சிப்காட் :      ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே திருவிக நகரைச் சேர்ந்த நித்திஷ் பார்த்திபன் நித்திஷ் ஆகிய மூன்று தனியார் பள்ளி மாணவர்கள் மணியம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறதுஇந்நிலையில் மூன்று மாணவர்கள் கேரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவன் தற்செயலாக ஆழமான பகுதியில் சிக்கியதாக தெரிகிறது அந்த மாணவனை காப்பாற்ற மற்ற இரண்டு மாணவர்கள் உள்ளே சென்றபோது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்மூழ்கிய மாணவர்களின்   அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏரியின் அருகே சென்று நீரில் மூழ்கிய மாணவர்களை அடுத்தடுத்து மீட்டு சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் மாணவர்களின் உடலை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார் தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை...

பறிமுதல்

 பேரணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 5 டன் கல் கம்பங்கள் மினி லாரி பறிமுதல்- பேரணாம்பட்டு போலீசார் விசாரணை பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பத்தலபள்ளி தமிழக ஆந்திர எல்லை வன சோதனை சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி பாறை கற்கள் ஏற்றி வருவதாக வேலூர் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வள த்துறை அலுவலகத்திற்கு வந்த தொடர் புகரை அடுத்துஇன்று பேரணாம்பட்டு வி. கோட்டா செல்லும் சாலையில் கனிமவளத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி பாறை கல் கம்பங்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது மேலும் அதிகாரிகளை கண்டதும் லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் கல் கம்பத்துடன் மினி லாரியை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் கனிம வளத்துறையினர்  ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கன் பறிமுதல்

Image
 தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் துப்பாக்கி பறிமுதல் - குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதுஇந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செருவங்கி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஹேர் துப்பாக்கி இருந்தது தெரியவந்ததுமேலும் அந்த துப்பாக்கியை வைத்திருந்த பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் அந்த துப்பாக்கியை ஒப்படைத்தனர் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஹேர் துப்பாக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

2 பேர் பலி

  சோளிங்கரில் இளைஞர் இருசக்கர வாகனத்தை போட்டி போட்டு ஓட்டி சென்றதில் இருசக்கர வாகனங்கள் மரத்தில் மோதி இருவர்  பலி   சோளிங்கர்:       ராணிப்பேட்டைமாவட்டம்,கட்டாரிக்குப்பத்தை சேர்ந்த சீனிவாசன் என்பரின் மகன் தருன்குமார்(18) இவர்களுடைய நண்பர் நவீன்(25). இவர்கள் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் கட்டாரிகுப்பம் பகுதியில் இருந்து அருண் ஒரு இருசக்கர வாகனத்திலும், தருண்குமார் மற்றும் நவீன் ஆகிய இருவரும் வேறொரு இருசக்கர வாகனத்தில் என இரண்டு இரு சக கர வாகனத்தில் சோளிங்கர் நோக்கி பாணாவரம் சபோளிங்கர் சாலையில் சோளிங்கர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருவரில் யார் முந்தி செல்வது என்ற வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது பாணாவரம் சோளிங்கர் சாலையில் முதல் மன்டபம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த வேப்பமரத்தில் பலமாக மோதியது அதே நேரம் பின் தொடர்ந்து வந்த தருண்குமார் ஓட்டி வந்த வாகனமும் பின் தொடர்ந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் படுகாயம் அடைந்...

10% ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு பேட்டி

   கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு மோடி அறிவித்துள்ள அறிவிப்பு தங்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர்  வெங்கடசுப்பு அரக்கோணத்தில் பேட்டி....அமெரிக்கா ஈரான் போர் ஏற்பட்ட காரணத்தால் 10 சதவீத உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.... அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர்  . வெங்கட சுப்பு செய்தியாளர்களை சந்தித்தார்.அமெரிக்கா ஈரான் போர் காரணமாக எரிவாழ்வு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் 10% உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மற்ற உணவகங்கள் மின் சக்தி மூலமாகவும், விறகு அடுப்பு மூலமாக உணவகங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் உணவகங்கள் நேரம் மாற்றப்பட்டு குறைந்த நேரத்தில் உணவகங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியலில் உள்ள உணவு பண்டங்களை குறைத்து இருப்பதாகவும், மிகுந்த சிரமத்திற்கு இடையே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்தப் போரை கார...

செய்திகள்

Image
2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் டார்க் ரூமில் வைத்து சீல் வைத்த தேர்தல் நடத்தும் அலுவலர் வேலூர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில்குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு கருவி விவிபேட் உள்ளிட்டவைகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக திமுக பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் குடியாத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமி முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி பார்த்து டார்க் ரூமில் சீல் வைக்கப்பட்டது  ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னனுவாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டது   ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழகத்தில்அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது இதற்காக மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர் உள்ள மஞ்சள் குடோனில் வைக்கப...