Posts

Showing posts from April, 2026

அண்ணாமலையார் கோயிலில்பொம்மை பூபோடும் விழா

Image
 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா பொம்மை பூ போடும் விழாநடந்தது  வேலூர்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 10 நாள் நடக்கும் சித்திரை வசந்தஉற்சவவிழா சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது  நேற்று அண்ணாமலை அண்ணா முலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து அங்குள்ள மகிழ மரத்தை 10 முறை சுற்றி வந்தார்  இன்று கோவில் மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்பொழுது பெண் வடிவ பொம்மை பூ போடும் விழா நடந்தது இதில் பெண்  பொம்மை ஊஞ்சலாடுவதைப் போல வேகமாக வந்து அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் மீது பூக்கள் போட்டார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்  தமிழ்நாடு ஆந்திரா தமிழ்நாடு ஆந்திரா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தபக்தர்கள் அதிக அளவு கலந்து கொண்டனர்   5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர் తిరువణ్ణామలై అరుణాచలేశ్వర ఆలయంలో వసంతోత్సవంలో భాగంగా బొమ్మలకు పుష్పగుచ్ఛా...

நல்வரவு

Image
நாள்.24.04.2026 * நாளையும் நாளை மறுநாளும் கணக்கும் இனிக்கும் - கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா 2026* &&&&&&&&& ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா சிறப்பு கருத்தாளர்களைக் கொண்டு கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் நாளை 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.  குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் அறிவுத்தோட்டத்தின் நிறுவுனர் கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர்  தலைமை தாங்குகிறார்கள்....

கணித திருவிழா

Image
*கணக்கும் இனிக்கும் - கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா 2026* வேலூர் ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா சிறப்பு கருத்தாளர்களைக் கொண்டு கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் இன்று 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா பயிற்சி முகாம் நடைபெற்றது.  குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் அறிவுத்தோட்டத்தின் நிறுவுனர் கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர்  தலைமை தாங்கினர். முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினா...

பாராட்டு விழா

Image
*பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கணக்கும் இனிக்கும் பயிற்சி நிறைவு* *விழாவில் சான்றி வழங்கி பாராட்டு* வேலூர்   கணித திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வானவில் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார்  வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும்  பள்ளிகளைச் சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா  கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது, எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் சனி, ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் நடைபெற்றது.  குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்த...

மிரட்டல்

Image
வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு  வெடிகுண்டு மிரட்டல்  மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை  வேலூர்,ஏப்.28- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்று பகல் 12 மணி அளவில் வெடித்து சிதறும் என நேற்று இரவு கலெக்டர் அலுவலக ஈமெயில் முகவரிக்கு ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார்.  இன்று காலை அலுவலகத்திற்கு அதிகாரிகள் கலெக்டரின் இமெயில் ஐடியை திறந்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மோப்ப நாய் ரீட்டா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வளாகம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.  ஏற்கனவே கணக்கு அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீண்டும் வெடிகுண்டு விரட்டல் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் களத்தில் அலுவலக ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள்

Image

செய்திகள்

Image

செய்திகள்

Image
 குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு ஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு ஆட்டோ டிரைவர் கைது போலீசார் விசாரணை குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 53 ஆட்டோ டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் சதீஷ்,கிரிபிரசாத் இவர்களும்  ஆட்டோ டிரைவர்கள் வெங்கடேசனுக்கும் சதீஷுக்கும்  அவர்களின் ஆட்டோக்களை காலி இடத்தில்  நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது இந்தத் தகராறு எதிரொலியாக மாலையில் சதீஷின் தம்பி கிரிபிரசாத் வெங்கடேசன் உடன் வாக்குவாதம் செய்துள்ளார்இதன் தொடர்ச்சியாக கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டி உள்ளார்இதில் தலை உள்ளிட்டது இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வெங்கடேசனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குட...

8 கிலோ கஞ்சா பறிமுதல்

குடியாத்தத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்,கஞ்சா கடத்தி வருவதற்கு  கஞ்சா வழக்குகளில் சிறையில் இருப்பவர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் சிறையில் இருப்பவரின்  வீட்டில் நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் மனைவி உள்பட  இரண்டு பேர் கைது  வேலூர்   வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் நேரு நகரை சேர்ந்தவர் சம்சுதீன் இவரது மகன்கள் முபாரக் வயது 30,அமீர் உசேன் வயது 23 ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அண்ணன் தம்பி தொடர்ந்து கஞ்சா விற்று வழக்கில் கைது செய்யப்பட்டதால் இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.சிறையில் இருந்தபடியே முபாரக் சிறையில்உள்ள போதை பொருட்கள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன்  நட்பு ஏற்படுத்திக் கொண்டு மெத்தபைட்டமன் போதை பொருளை வெளி மாநிலத்திலிருந்து வரவழைத்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் குடியாத்தம் பகுதியில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது இதன் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர்.சிறையில் இருக்கும் கஞ்சா வியாபாரி முபாரக் சிறையில் இருந்தபடியே தனது குடும்பத்தினர்...

1டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.3 பேர் கைது, நகர காவல்துறையினர் நடவடிக்கை திருப்பத்தூர்              திருப்பத்தூர் மாவட்டம் ,வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகே நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில், ஆந்திரா மாநிலத்திற்கு 1 டன் ரேஷன் அரிசி கடத்திச்செல்வது தெரியவந்துள்ளது. உடனடியாக வாகனத்துடன் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம். பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த கோபி, சித்திக் பாஷா, முஹம்மத் அலி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுதுறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனர்.

எரித்து கொலை?

  அரக்கோணம் ரயில் நிலையம் அருகே எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சென்னை பாடியை சேர்ந்தவர் என விசாரனையில் தகவல் அரக்கோணம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே யார்டில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுமார் 30 வயது நபர் சென்னை பாடியை சேர்ந்தவர் என ரயில்வே போலீஸ் முதற்கட்ட விசாரனையில் தகவல்.அரக்கோணம் ரயில் நிலைய யார்டில் கடந்த ஏப்ரல் 11ம் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து எரித்து கொல்லப்பட்ட நபர் யார்  எதற்காக எரிக்கப்பட்டார் அல்லது தற்கொலை செய்து கொண்டாரா  என்கிற கோணத்தில் விசாரனை மேற்கொண்டனர்கள். இந்நிலையில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சென்னை அம்பத்தூர் அடுத்த பாடியை. அடுத்த மண்ணூர் பேட்டையை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் செய்யத் அப்துல் கரீம்(40) என்பது தெரிய வந்தது. இவர் முன்விரோதம் காரணமாக ஏரித்து கொல்லப்பட்டாரா  அல்லது வேறு காரணங்களா எரித்து கொன்றவர்கள் யார் என்கிற கோணத்தில் அரக்கோணம் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து விசாரனை நடத்...

மிரட்டல்

Image
  வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை வேலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்று பகல் 12 மணி அளவில் வெடித்து சிதறும் என நேற்று இரவு ஆட்சியர் அலுவலக ஈமெயில் முகவரிக்கு மெயில் வந்துள்ளதுஇன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் ஈமெயிலை பார்த்தபோது அதில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பது தெரியவந்தது உடனடியாக அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்தகவலின் பேரில் மோப்ப நாய் ரீட்டா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீண்டும் வெடிகுண்டு விரட்டல் எடுக்கப்பட்டுள்ள சம்பவம்  அலுவலக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர ஜோதி நிருபர் கத்தியால் வெட்டி கொலை

Image
*சித்தூர் மாவட்டம் V.கோட்டா (வேங்கடகிரி கோட்டா) ஆந்திர ஜோதி நிருபர் கத்தியால் வெட்டி  கொலை - மற்றொரு நிருபருக்குப் பலத்த காயம்* சித்தூர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவில் இன்று காலை அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரஜோதி நாளிதழின் நிருபர் ஜெகன்மோகன் ரெட்டி மர்ம நபர்களால் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சித்தூர் மாவட்டம் வி கோட்டா ஆந்திர ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன் மோகன் ரெட்டி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரைப் பின் தொடர்ந்து வந்து கத்திகளால் சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அதிக ரத்தப்போக்கு காரணமாகச் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவருடன் இருந்த பிரஜாசக்தி பத்திரிகை நிருபர் தாக்குதலைத் தடுக்க முயன்ற போது அவருக்கும் அருவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெகன்மோகன் ரெட்டியின் உடலைக் கைப்பற்றி ...

செய்திகள்

Image