Posts

Showing posts from July, 2026

செய்திகள்

Image

செய்திகள்

Image
வேலூர் அருகே  வனவிலங்கு வேட்டையாட வைத்திருந்த 3 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்  வேலூர்,ஜூலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் நேற்று அரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியூர் அருகே உள்ள ஏரியில் 3 பேர் நாட்டு துப்பாக்கிகளுடன் நடமாடுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப்படை போலீசார் ஏரி பகுதிக்கு சென்று அங்கு சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து வந்து அரியூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அல்லேரி மலை கிராமத்தை சேர்ந்த சேட்டு (வயது 42), கோபி (37), ரஞ்சித் (27) என தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் இருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் முயல் பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை வைத்திருந்ததாக தெரிவித்தனர்.  வேலூரில் வாகன சோதனையின் போது  பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது  வேலூர்,ஜூலை வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவ...

செய்திகள்

Image

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது ஆபத்தானது துரைமுருகன் பேட்டி

Image
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தானது -  முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான  துரைமுருகன் காட்பாடியில் பேட்டி  வேலூர் வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தனது இல்லத்தில் திமுக பொதுசெயலாளரும் முன்னாள் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியது  மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணிராமதாஸ் நீர்வளதுறையிடம் கேள்விகளை கேட்டார் அதற்கு நீர் வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதில் தவறு  காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரியின்   தமிழ்நாடு,பாண்டிச்சேரியிடம்,ஆலோசிக்காமல்,எந்த நீர்தேக்கத்தையும் அமைக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது ஆனால்  மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர்  எந்த தடையும் ஆலோசனையும் பெற வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என கூறுவது அபத்தமானது ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூடவா தெரியாமல் போய்விடும்   எனவே தமிழக அரசு மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் கூட்டி அனைத்து...

நகை திருடிய இரண்டு பெண்கள் கைது

Image
பஸ்ஸில்  நகை திருடிய 2 பெண்கள் கைது! 8.5 சவரன் தங்க நகைகள் மீட்பு! வேலூர் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, வேலூர் வடக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  வேலூர் சாத்துப்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர் பெங்களூரிலிருந்து பஸ்சில் நேற்றுவேலூர் வந்தார். அவர் தனது கைப்பையில் வைத்திருந்த 8.5 சவரன் தங்க நகைகள், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இறங்கிப் பார்த்தபோது காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில், வேலூர் வடக்கு காவல் துறையினர் பஸ் நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், நகைகளைத் திருடியது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (27) மற்றும் சவுந்தர்யா (29) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இருவரையும் இன்று கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 8.5 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் வேலூர் பெண்கள்சிறையில் அடைக்கப்பட்டனர்.கைது செய்யப...

மது போதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது

Image
வேலூர்      29-7-26 மது போதையில் தந்தையை கத்தியால் வெட்டிகொலை செய்த மகன் கைது  ________________________________         வேலூர்மாவட்டம்,வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டை ரோடு   பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (70) இவர் தச்சு தொழிலாளி இவரது மகன் புறா (என்ற) சக்திவேல் (40) அவரும் தந்தையுடன் தச்சுவேலை செய்து வருகிறார் தந்தை மகன் இருவரும் மது அருந்துவது பழக்கம் இந்த நிலையில் நேற்று இருவரும் மது அருந்தும் போது வாய்தகராறு ஏற்பட்டுள்ளது இதில் மது போதையில் இருந்த சக்திவேல் தந்தையை கத்தியால் வெட்டிகொலை செய்தார்  பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலிருந்து காணாற்றின் ஓரம் படுத்து தூங்கிவிட்டார் இதுகுறித்துதகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை செய்த சக்திவேலை கைது செய்தனர்        மதுபோதையில் தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியு...

ஏரி வேலை செய்யும் மூதாட்டிக்கு௹ 2.79 கோடி GST கட்ட நோட்டீஸ்

Image
ஏரி வேலை செய்யும் மூதாட்டிக்கு ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. கட்ட நோட்டீஸ்  ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு  வேலூர்  ஜூலை.29- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்குமணி. இவர் நூறு நாள் வேலை திட்டமான ஏரி வேலைக்கு சென்று தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள வங்கிக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வந்த பணத்தை எடுக்க சென்றார். அப்போது ஆம்பூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் உதவி ஆணையர் மூலமாக வரியைப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் நீங்க ஆர்.எம். டிரேடர்ஸ் வைத்துக்கொண்டு அதன் மூலம் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 பணம் ஜி. எஸ். டி வரி செலுத்த வேண்டும் என்றும், இதனால் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், அதன் காரணமாக உங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினர். இதைக் கேட்டு மூதாட்டி ருக்மணி அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் திகைத்து நின்றார். மேலும் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஏரி வேலை செய்யும் மூதாட்டிக்கு ரூ. 2.79 கோடி...

இறந்தவர் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய ரூ 2000 லஞ்சம்

Image
వెల్లూరు ఉడుకంపరై ప్రభుత్వ ఆసుపత్రిలో దిగ్భ్రాంతి మృతుడికి పోస్ట్‌మార్టం నిర్వహించేందుకు రూ. 2 వేల లంచం తీసుకున్న ఉద్యోగి సోషల్ మీడియాలో వైరల్ అయిన వీడియో వెల్లూరు, జూలై 29- శరవణన్ వెల్లూరు జిల్లాలోని ఒడుగత్తూరు సమీపంలో ఉన్న పలంపట్టు పంచాయతీలోని పత్తికొల్లై మలై గ్రామానికి చెందినవాడు. అతను రెండు రోజుల క్రితం ఎలుకల మందు తాగి మరణించాడు. అతని మృతదేహాన్ని పోస్ట్‌మార్టం కోసం ఉడుకంపరై ప్రభుత్వ ఆసుపత్రికి తరలించారు. అక్కడ పనిచేస్తున్న ఉద్యోగులలో ఒకరు, పోస్ట్‌మార్టం కోసం అవసరమైన సామాగ్రి కొనుగోలు చేసి, నిర్వహించడానికి డబ్బులు ఇవ్వాలని శరవణన్ బంధువులను కోరాడు. మృతదేహాన్ని తీసుకువెళ్లడానికి వచ్చిన బంధువులు ఇప్పటికే దుఃఖం, మానసిక వేదనలో ఉండగా, వారి నుండి లంచం తీసుకోవాలని బలవంతం చేయడం కొండ ప్రాంత ప్రజలలో తీవ్ర అసంతృప్తిని కలిగించింది. సామాజిక కార్యకర్తలు ఇలా అన్నారు:- వెల్లూరు మరియు దాని చుట్టుపక్కల వివిధ ప్రాంతాలలో ప్రమాదాలు మరియు అసాధారణ పరిస్థితులలో మరణించిన వారి మృతదేహాలను పోస్ట్‌మార్టం కోసం అడుక్కంపరై ప్రభుత్వ ఆసుపత్రి మార్చురీకి తీసుకువస్తున్నారు. పోస్ట్‌మార్టం పూర్తయిన తర్వాత మృత...

லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நீர் மோர்

Image
తిరువణ్ణామలైలోని లక్షలాది బుద్ధులకు నీరు, మజ్జిగ వెల్లూరు ఆషాఢ మాస పౌర్ణమి సందర్భంగా లక్షలాది భక్తులు తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయాన్ని సందర్శిస్తున్నారు. వారు అన్నామలైయార్ దర్శనం కోసం చాలా గంటలపాటు వేచి ఉంటున్నారు. ఆలయ నిర్వాహకులు భక్తులకు ఉచితంగా నీరు, మజ్జిగ బిస్కెట్లు, నీటి సీసాలు మరియు అరటిపండ్లను అందించారు. +  +திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான புத்தர்களுக்கு நீர் மோர் வேலூர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்  கிரிவலம் சென்று வருகின்றனர். மேலும் பல மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர் கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக  பக்தர்களுக்கு நீர்மோர் பிஸ்கட் வாட்டர் பாட்டில் வாழைப்பழம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

Image
திருவண்ணாமலை கிரிவலம் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்  வேலூர் திருவண்ணாமலையில் ஆடி மாத   பௌர்ணமி கிரிவலம் நேற்று இரவு 28.7 2026 இரவு 7.31 மணி தொடங்கி இன்று 29.7.2026 இரவு 8.50 மணிக்கு முடிகிறது. இதை ஒட்டி லட்சக் கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு பின்புறம் உள்ள அண்ணாமலையில் கிரிவலம் சென்றனர் மேலும் 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாரை சுவாமி தரிசனம் செய்தனர் கிரிவலம் நடப்பதை ஒட்டி தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது மேலும் திருவண்ணாமலைக்கு வந்து சென்ற ரயில் கட்டுக்காத காண கூட்டம் இருந்தது பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு ரயிலில் ஏறினார் +  + తిరువణ్ణామలై గిరివలయం లక్షలాది భక్తులు గిరివలయానికి తరలివెళ్లారు వెల్లూరు ఆషాఢ మాసం తిరువణ్ణామలైలో పౌర్ణమి గిరివలయం నిన్న రాత్రి 28.7.2026న సాయంత్రం 7.31 గంటలకు ప్రారంభమై, ఈరోజు 29.7.2026న రాత్రి 8.50 గంటలకు ముగుస్తుంది. దీని సందర్భంగా, ...

ஆறுதல்

Image
ஆறுதல் வேலூர் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோளிங்கர் நிருபரை *கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆலோசனை பேரில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு   சந்தித்து , நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அவரது கண்டன அறிக்கை: சோளிங்கர் தொகுதியில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள்  "ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன".  மக்களிடையே மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறிய முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சியில், பத்திரிக்கையாளர்கள் மீதே ஆளுங்கட்சி எம்எல்ஏ தலைமையில் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் குற்றச்சாட்டுகள் எழுவது, அவர்கள் வாக்குறுதியளித்த மாற்றம் இதுதானா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கையாளர்கள் மீது நடைபெற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது தர்மமா?

Image
செய்தியாளர்களை தாக்கிய  தவெக MLA சோளிங்கள் ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கரில் நியூஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களின் செய்தியாளர்களை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட சோளிங்கர் தவெக MLA கபில்  கையை முறுக்கி கடுமையாக தாக்கியதில் நியூஸ் தமிழ் செய்தியாளர் அரங்கநாதன் உள்ளிட்ட செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி இது தர்மமா?

கண்டன அறிக்கை

Image
*கண்டன அறிக்கை* *ராணிப்பேட்டை மாவட்ட பிரஸ் கிளப்* ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பணியாற்றி வரும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை *ராணிப்பேட்டை மாவட்ட பிரஸ் கிளப்* வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தங்களது கடமையை நேர்மையாகவும் அச்சமின்றியும் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், அவர்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களையே கேள்விக்குறியாக்குகின்றன. கருத்துச் சுதந்திரம் மற்றும் பணிச் சுதந்திரத்தை ஒடுக்க முயலும் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, இத்தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க தம...

கைது

Image
வேளச்சேரியில் பெண்ணிடம் அத்துமீறிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கைது* சென்னை * வேளச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். * ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து அமலாக்க பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர் மணிமாறன் கைது செய்யப்பட்டவர். * ஞாயிற்றுக்கிழமை மது போதையில் இருந்தபோது, வேளச்சேரியில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் இவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. * இது தொடர்பாக வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்தனர்