அப்பா ஏன் பின் தங்கி இருக்கிறார்.
*அப்பா ஏன்* *எப்போதும்* *பின்தங்கி*
*யிருக்கிறார் என்று தெரியவில்லை.....*
1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். *இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.*
2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். *இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.*
3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. *அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.*
4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, தலைமுறை தலைமுறைகளாக, *அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை..*
5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. *அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.*
6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை.
இருந்தாலும் *அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.*
7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். *ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.*
8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார். குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், *அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.*
9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
*அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?*
அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும் காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.
*இருந்தாலும்* *அப்பா*
*ஏன் பின்தங்கியே* *இருக்கிறார்* *என்றுதான்*
*தெரியவில்லை...,...*
*தந்தையைப் போற்றுங்கள்.*
*படித்ததில் வலித்தது.*
🔥அப்பா🔥
நாட்காட்டியாய் கிழிபடுவார்
வழிகாட்டியாய்
வலம் வருவார்✍️
மொழிபெயர்க்கவே முடியாத
கவிதை
அப்பா மட்டுமே✍️
தந்தையின் கண்ணீரை
இரவுகள் மட்டுமே அறியும்✍️
ஆசைகள் அனைத்தையும்
துறந்த துறவி✍️
பிள்ளைகளுக்காக எதை வேண்டுமானாலும்
தொல்லைகள் என எண்ணாது
வரமாய் ஏற்றுக் கொள்ளும்
பெரும் வரம்✍️
கண்ணீரால் அழுது
கவலையை கூட கழுவாமல்
தண்ணீராய் பாயும் நதி ✍️
புகழையும் பதவியையும் தனக்காக்காமல்
தன் பிள்ளைக்கு
விளக்காக --- கிழக்காக உதிக்கின்ற
கதிரவன்✍️
பல நூறு வடிவாக அன்பை பகிரத் தெரிந்தும் பேரன்பின் மெளனத்துள் வசிக்கின்ற
தெய்வம்✍️
தந்தையின் வலியை உணர
மகன் தந்தையானாலும் முழுமையாய்
உணரவே முடியாது✍️
தாயன்பு கூட தோற்பது
தந்தையின் பேரன்பின் அமைதியில்
தான்✍️
ஒவ்வொருவரின் முதல் கதா நாயகன்
அப்பா மட்டுமே✍️
கருவறை சுமக்காத
இரண்டாம் தாய்✍️
அப்பாவின் கோபம் எனப்படுவது
நடுச் சாமத்தின் முத்தம்✍️
அப்பாவின் சூடான வார்த்தைகள்
அதிகாலை தேநீர் ✍️
அப்பாவின் புரியா மொழியை
புரிந்த அகராதி
அம்மா✍️
அம்மாக்களை உலகமே கொண்டாடும்- ஆனால்
அம்மாக்களே உலகம் என கொண்டாடுவது
அப்பாக்களை மட்டுமே✍️மட்டுமே✍️
ஆண் பிள்ளைகளுக்கு அப்பப்போ நினைவில் மட்டுமே
பெண் பிள்ளைகளுக்கு
அப்பா நினைவு தினமும் ஓடோடி வந்து முட்டுமே
அப்பாவின் இறப்பின் பின் மகன்கள் அப்பா போல் வாழ ஆரம்பிப்பார்கள்
மகள்கள் மட்டும்
அப்போது தான் அழவே
ஆரம்பிப்பார்கள்
✍️அப்பா - ஆண் குழந்தைகளுக்கு வானம்
பெண் குழந்தைகளுக்கு
அணைக்கட்டு✍️
✍️
பிள்ளைகளிடம் எத்தனை முறையும்
தோற்று போகும் அப்பா
பிள்ளை ஒரு தடவை கூட தோற்பதை
தாங்கவே மாட்டார்✍️
🙏கால் நடையை விட காயப்பட்ட பாதம்
அப்பாவின் கால்கள் வெறும் கால்கள் அல்ல
காலத்தின் வேதம்🙏
♥️❤️ ❤️♥️
Comments
Post a Comment