அக்னி வெயிலுக்கு மோர் வழங்கும் விழா


காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் *மோர் தர்பூசணி பழங்கள் வழங்கும் விழா அவைத்தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது .
காட்பாடி காவல்துறையின் உதவி ஆய்வாளர் மனோகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் பழங்களை வழங்கி துவக்கி வைத்தார் - நிகழ்வுக்கு அவை துணைத் தலைவர்கள் ஆர் சீனிவாசன் ,ஆர் விஜயகுமாரி, செயலாளர் சிவ வடிவு, பொருளாளர் பி பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், எம்எஸ் கலையரசன் ,தன்னார்வ தொண்டர்கள் மோதகப் பிரியன். சோமசுந்தரம் ,தணிகை செல்வம், திருமகள் செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
கோடை வெப்பம் உச்சமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளான 
இன்று முதல் கத்திரி வெயில் நிறைவு செய்யும் நாள் வரை காலை முதல் பிற்பகல் வரை தினம் தோறும் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்குவதனை காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் முடிவு செய்து செயலாற்றி வருகிறது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்