கைது
7 வயது சிறுமியை
பலாத்காரம் செய்த
70 வயது முதியவர் கைது
ராணிப்பேட்டை, அக்.
ஏழு வயது சிறுமியை பலாத்காரம் செய்த 70 வயது முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் எழு வயது மகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டு முன்பு சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, கீழதேவதானம்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சாரங்கபாணி, 70, என்பவர் சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக்கொடுத்து மறைவிடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
புகார்படி ராணிப்பேட்டை மகளிர் போலீசார் சாரங்கபாணியை போக்சோவில் இன்று கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment