விஷ்ணு
♦️விஷ்ணு சகஸ்ரநாமம்♦️
*********************************
🌲இன்று 251, 252 திருநாமங்கள் 🌲
*************************************
🌹251. சிஷ்டக்ருதே நமஹ :🌹
***********************************
(Shishtakruthe namaha)
🌹252. சுசயே நமஹ :🌹
****************************
(Shuchaye namaha)
(விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு உரை எழு திய ஸ்ரீபராசர பட்டர், 251 மற்றும் 252- வது திருநாமங்களாக வரும் சிஷ்டக்ருத், சுசி: ஆகிய இரு திருநாமங்களையும் இணைத் துப் பொருளுரைத்துள்ளார். இன்?என வே அவர் காட்டிய வழியைப் பின்பற்றி இரு திருநாமங்களுக்கும் சேர்த்து ஒரே கதையை வழங்கியுள்ளோம்.)
ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களை ப் பார்த்து,
“அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ”
என்ற சுலோகத்தை சொன்னார்.
பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.
“சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர் கள்.
ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழை ந்த பிரம்மதேவர், தமது கற்பனையை எல் லாம் திரட்டி அகல்யாவை உருவாக்கினார்.
அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி.
ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா தேவியைக் கண்டெடுத்தார்.
பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள்.
பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா என்னும் அப்சரஸ் பெண் ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும்
அழகிய பெண்ணாக மாற்றினார்!”
என்று கூறினார் வேத வியாசர்.
“இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?” என்று கேட்டார்கள் சீடர்கள்.
அதற்கு வேத வியாசர்,
“இந்த ஐவருமே தங்கள் வாழ்வில் பேரிழப் புகளையும் பெருந்துயரங்களையும் சந்தி த்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற் றி கண்டவர்கள்.
தன் கணவர் கௌதமர் தந்த சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோ டும் மனவுறுதியோடும் இருந்த அகல்யா வை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய பெண்ணாய் ஆக்கினான்.
கௌரவர்களின் சபையில் பெரும் அவமா னத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதி யுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து,
பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.
பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக் கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.
வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத்
துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள்.
ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள்
எனவே இந்த ஐவரும் காலையில் தியானி க்கத் தக்கவர்கள்!” என்று கூறினார்.
அப்போது சீடர்கள், “சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா?
இந்திரனின் ஆசைக்கு இணங்கினாள் அகல்யா.
ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி. வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவ னை மணந்தாள் தாரை.
மண்டோதரி நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள்.
இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக முடியும்?”
என்று வியாசரிடம் கேட்டார்கள்.
அதற்கு வியாசர்,
“அதற்குத் திருமாலின் திருவருளே காரணம்.
ராமனின் பாதுகை யில் உள்ள மண் அகல் யாவின்மீது பட்டமாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத் து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள்.
திரௌபதி எப்போதும் கண்ணனையே தியா னித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள்.
ராம தரிசனத்தால் தாரையும் மண்டோதரி யும் தூய்மை பெற்றார்கள்.
இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண் டோதரி ஆகியநால்வரும் மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்ற ப்படுகிறார்கள்!” என்றார்.
அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல் சாதாரண மனிதர்களைக் கூடத் தனது சம்பந்தத்தா லே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் ‘சிஷ்டக்ருத்’ (உயர்ந்தவர்க ளை உருவாக்குபவர்) என்று அழைக்கப் படுகிறார்.
உயர்ந்த மனிதர்களை ‘சிஷ்ட:’ என்று சொ ல்வார்கள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குப வர் என்று பொருள். ‘சிஷ்டக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது திருநாமம்.
அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூட தனது சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார்.
‘சுசி:’ என்றால் தூய்மை என்று பொருள். தானும் தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதா ல் திருமால் ‘சுசி:’ எனப்படுகிறார். அதுவே
ஸஹஸ்ரநாமத்தின் 252-வது திருநாமம்.
“சிஷ்டக்ருதே நம:” என்று தினமும் சொல் லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந் த நிலையை அடையத் திருமால் அருள் புரிவார். “சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.
(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)
🌹🌹ஓம் நமோ நாராயணாய..
🌹🌹ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...
Comments
Post a Comment