தர்ணா
ஊராட்சி மன்ற
தலைவர்
தர்ணா
ஆற்காடு, ஏப்.
ஊராட்சி செயலாளரை நியமிக்கக் கோரி, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் ஆற்காட்டில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பூட்டுத்தாக்கு கிராம ஊராட்சியில் தலைவராக அருண் உள்ளார். கடந்த ஆறு மாதமாக ஊராட்சி செயலாளர் பதவி காலியாக உள்ளது. இதனால் வரி வசூல் மற்ற திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளரை நியமிக்கக்கோரி கடிதம் அனுப்பியும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஊராட்சி தலைவர் அருண் தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி பேச்சு வார்த்தை நடத்தி, விரையில் ஊராட்சிp செயலாளரை நியமித்ததாக உறுதியளித்ததன்பேரில் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Comments
Post a Comment