சிகிச்சை

தேனீக்கள் கொட்டியவர்களுக்கு
மொட்டை அடித்து சிகிச்சை



வேலுார், ஏப். 28–
குடியாத்தம் அருகே, தேனீக்கள் கொட்டிய 10 பேருக்கு அரசு  மருத்துவமனையில் மொட்டை அடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே தட்டப்பாறை  பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்பாபு, 20, ராஜேஷ், 19. வெல்டிங் வேலை செய்து வருகின்றனர். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த எட்டு மாணவர்கள் குடியாத்தம் அருகே மூலக்கொல்லை வனப்பகுதிக்கு  நேற்று  ( 26)  மாலை 5:00 மணிக்கு சென்று மரத்தில் கட்டியிருந்த தேன்கூட்டை உடைத்து தேன் எடுக்க முயன்றனர்.
ஆத்திரமடைந்த தேனீக்கள் அவர்களை விரட்டிச் சென்று கொட்டியது.  படுகாயமடைந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் தலை முழுவதும் தேனீக்கள் கொட்டியதில் அதன் கொடுக்குகள் இருந்தன. ஒவ்வொருவரின் தலையிலும் 10க்கும் மேற்பட்ட கொவுடுக்குகள் இருந்ததால் மருத்துவமனை ஊழியர்களை கொண்டு அவர்களுக்கு மொட்டை அடித்து கொடுக்குகளை அகற்றி சிகிச்சை அளித்தனர்.
இந்த சிகிச்சை நேற்று  இரவு 10:00 மணிக்கு தொடங்கி இன்று மதியம் 2:00 மணி வரை நடந்தது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்