விழா
ராணிப்பேட்டைமாவட்டம் 14-5-23
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் 69 கிலோ எடை கொண்ட கேக்கினை குழந்தைகளோடு உற்சாகமாக கொண்டாடிய அதிமுகவினர்
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை நகர கழக அவைத்தலைவர் ஆர் குமரன் தலைமையில் நடைபெற்றது இதில் நகர கழகச் செயலாளர் கே.பி.சந்தோஷம் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சுகுமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பூண்டி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை பொறுப்பேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை கொரடா சு.ரவி சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர் பின்னர் அலுவலகத்தின் வெளியே உள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்..
இந்த செயல்வீரர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவிஇந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளை அதிமுக கழக நிர்வாகிகள் நிறைவேற்றி விட்டீர்களானால் நமது அதிமுக கழகத்தை எந்த ஒரு கொம்பாதி கொம்பனாலும் அசைக்க பார்க்க முடியாது என அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி ஆவேசமாக பேசினார்..
நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நகர கழக நிர்வாகத்தின் சார்பில் சுமார் 69 கிலோ எடை கொண்ட கேக்கை சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி குழந்தைகளோடு கேக் வெட்டி பிறந்த நாள் பாடல்களை பாடியபடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்..
Comments
Post a Comment